Sunday, July 15, 2007

எல்லாரும் சௌக்கியமா...?

என் இனிய (வலை) தமிழ் மக்களே...

நீண்ட இடைவெளிக்குப் பின்னால எழுதுதேன். கடைசியா பதிவு போட்டு ஆறேழு மாசம் இருக்குமின்னு நெனக்கேன். பதிவுகள படிக்கதுக்கே நேரம் இல்லாதபோது எழுத சுத்தமா சமயமில்ல.

திரும்ப வந்து தமிழ்மணத்த பாத்தா அடடா... எத்தன முன்னேற்றம்....!!!! புதுசா நெறய பேரு நல்லா எழுதுதாங்க... பழய ஆளுக நெறய பேரக் காணோம்... முன்னாடி இருந்த பூசல் சச்சரவு எல்லாம் இப்போ கொஞ்சம் கொறஞ்சிருக்குதப் பாக்குதப்போ கொஞ்சம் ஆறுதல்.

வலை நண்பர்கள்ல கானா பிரபா மட்டும் தான் இன்னும் தொடர்புல இருக்காரு. ஊரு ஊரா மாநாடு , பதிவர் சந்திப்பு எல்லாம் போட்டு, போண்டா, எள்ளுருண்டை எல்லாம் சாப்பிட்ட வலை நண்பர்கள் எல்லாரும் அதுக்கு அப்புறமா பேசிக்கிறீகளா இல்ல ரயில் சினேகம் மாதிரி தானா?

ஜி.ரா, டுபுக்கு அண்ணாச்சி, நிலவு நண்பன் எல்லாரும் நலமா? இனி கொஞ்சம் நேரம் எழுததுக்கு கெடைக்குமின்னு நெனக்கேன். பாக்கலாம்....


6 comments:

கானா பிரபா said...

தலைவா

நான் நெனைச்சேன், தமிழ்மணப் புறக்கணிப்புப் போராட்டத்தில் நீங்களும் இறங்கீட்டீங்கன்னு.

மீண்டு(ம்) வந்தது ரெம்ப மகிழ்ச்சி, நெல்லைச் சீமைப் பதிவுகளை அள்ளிவிடுங்கன்னு இந்த எடுபட்ட பயல் சொல்லிக்கிறேன் ;-)

நெல்லைக் கிறுக்கன் said...

தல,
மீண்டும் உங்கள வலைப் பதிவு மூலமா சந்திக்கறதுல ரொம்ப சந்தோசம்...

ஓஸ்ரேலியாவுல குளிர் எப்படி இருக்கு?

உம்ம நீங்கள் கேட்டவை பதிவுல, "ஏதோ நினைவுகள்" பாட்டு கேட்டிருக்கேன் போடுவீகளா?

முரளிகண்ணன் said...

வாங்க நெல்லை. நெல்லை மண் மனத்தோடு காதல் கதை ஒன்னு தட்டுங்க

நெல்லைக் கிறுக்கன் said...

வாங்க முரளி,
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி. காதல் கதய கண்டிப்பா தட்டுதேன்...

kama said...

நண்பருக்கு வணக்கம். உங்கள் தளம் நன்றாக உள்ளது. கருத்துக்களை தயக்கம் இன்றி வெளிப்படுத்துகிறீர்கள். நேரம் கிடைத்தால்
http://nellaitamil.com
இணையத்தை பார்த்து விமர்சிக்கவும் நன்றி.

நெல்லைக் கிறுக்கன் said...

வாருங்க மோகன்,
நம்ம பதிவு பக்கம் வந்ததுக்கு ரொம்ப நன்றி...

உங்கள் நெல்லை தமிழ் மின்னிதழப் பாத்தேன். ரொம்ப நல்லா இருக்கு. இந்த நல்ல முயற்சிக்கு பாராட்டுக்கள்.

நெல்லை தமிழா? இல்ல நெல்லைத் தமிழா? யாராவது தமிழ் வாத்தியார் கிட்ட கேட்டு அத உறுதி படுத்திக்கோங்க...

படங்கள் எல்லாம் அருமை... அப்படியே நெல்லையப்பர் கோயில் கோபுரத்தையோ அல்லது சங்கரன்கோயில கோபுரத்தையோ் முகப்பில போட்டா நல்லா இருக்கும்.