Monday, June 12, 2006

பால் பீச்சும் மாட்ட விட்டு, பஞ்சாரத்துக் கோழிய விட்டு....

"சோகங்களில் எல்லாம் பெரிய சோகம், தாயைப் பிரிவதல்ல, தந்தயைப் பிரிவதல்ல, நண்பனைப் பிரிவதல்ல, காதலியைப் பிரிவதல்ல, இதயெல்லாம் விட நாம் வாழ்ந்த சொந்த மண்ணைப் பிரிவது தான் மிகப் பெரிய சோகம்" அப்டின்னு நம்ம பாரதிராஜா அண்ணாச்சி கருத்தம்மா படத்துல வருத "போறாளே பொன்னுத்தாயி" பாட்டுக்கு ஒரு முன்னுரை கொடுப்பாரு. சமீபத்தில நம்ம சொக்காரங்க அம்பது வருசமா இருந்த சொந்த ஊர விட்டு சென்னைக்கு வந்தாக. அவுக வீட்ல எல்லாருக்கும் ஊரப் பிரியுதமேன்னு ரொம்ப மன வருத்தம்...

ஊருல இருந்தா முன்னேற்றமே இல்ல, மெட்ராசு பக்கம் போனா கொஞ்சம் பணங்காசு சேக்கலாமுன்னு நெறய குடும்பங்கள் கெளம்பி மெட்ராசுக்கு வருது. ஆனா அப்பிடி வருத எல்லாரும் மனசுல ரொம்ப சங்கடத்த வச்சுகிட்டு தான் வாராக. எப்போ நேரமும், பணமுங் கெடைக்கும் ஊரு பக்கம் ஒரு தடவ போயிட்டு வரலாம்னு எப்பவும் மனசுல ஒரு ஏக்கம் இருந்து கிட்டே இருக்கும். வீட்டுத் தோட்டம், ஊர் கோயில், குளத்தாங்கர, வாய்க்கால், வயல், தென்னந்தோப்புன்னு ஏதாவது ஒன்னப் பத்தி நெனப்பு நெஞ்சுக்குள்ள சுத்திகிட்டே இருக்கும்.

நான் படிப்ப முடிச்சிட்டு சென்னை வரும்போது எங்க தாத்தா வீட்டுல, ஒவ்வெரு எடமா போயி நின்னு ஏங்கி அழுதத ஆயுசு பூராவும் மறக்க முடியாது. மெட்ராஸ் வந்தும் ரொம்ப நாளக்கி ஊரு நியாபகமாவே இருந்தேன். நம்ம ஊருக்காரன எங்கனயாவது பாத்துட்டோம்னா அவ்வளவு சந்தோசமா இருக்கும்.

என்ன மாரி ஊரப் பிரிஞ்சு பட்ணத்துக்கு பொழப்புக்காக வந்திருக்கிற எல்லாருக்கும் ஊரப் பத்தின நெனப்பு இருந்துகிட்டே இருக்கும். மெட்ராசுலயே பொறந்து வளந்தவுகளுக்கு நம்மள எல்லாம் பாத்தா விசித்திரமா இருக்கும். அந்த மாரி ஆட்கள்ல நெறய பேரு மெட்ராசுக்கு தெக்க ஒரு தடவ கூட வந்திருக்க மாட்டாக. ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு, அது அங்க வாழ்ந்தவனுக்குத் தான் தெரியும். நம்மள்ல எல்லாருக்கும் பேச்சு, செயல், எண்ணம்னு எதுலயாவது ஒன்னுல சொந்த ஊரோட தாக்கம், பாதிப்பு கொஞ்சமவது இருந்துகிட்டு தான் இருக்கும். அப்பிடி இருக்கதுல தப்பு ஒன்னும் இல்ல. அத மறைச்சு நாகரீங்கற பேரில வெளி வேசம் போடாதிய

அதனால கோயம்புத்தூர்க்காரனோ, மதுரக்காரனோ, திருநெல்வேலிக்காரனோ அவங்க வட்டாரத் தமிழ்ல பேசினா தயவு செய்து யாரும் ஏளனம், கிண்டல் பண்ணாதிய. அதே மாரி நெறய பேரு ஊருல இருக்குத வீடு, வயல் தோட்டம், தோப்பு எல்லாத்தயும் வித்திட்டு பெருமைக்கு பெங்களூரு, சென்னைன்னு 40 லட்சம் 50 லட்சத்துக்கு பிளாட் வாங்கிப் போட்டுட்டு, அவுகளும் ஊர மறந்து, அடுத்தால வார சந்ததிக்கும் ஊரப் பத்தி எடுத்துச் சொல்லாம விட்டுருதாக.

நீ எங்க வேனாலும் இரு, சம்பாதி, சொத்து வாங்கு வேணாங்கல... ஆனா நீ வளந்த ஊருக்கு எதாவது நல்லது பண்ணு. வளந்த மண்ண மறக்குதது, பெத்த தாய மறக்குற மாதிரி.

8 comments:

Anonymous said...

என்னாவே திடிரூன்னு செண்டியாயிட்டீரு?....ஆனா நீரு சொல்றது நூத்துக்கு நூறு உணைமைவே...நானும் மெட்ராஸுக்கு படிக்க வந்த காலத்துல..நம்மூர் கதையப் பேசிப் பேசியே....சந்தோசப் பட்டிருக்கேன்...இதோ இங்கன ப்ளாக்ல கூட நம்மூர்காரப் பயக வந்தா அதுல பின்னூட்டம் போடுற சந்தோசமே தனிவே....ஹூம்...நம்மூர் நம்மூர்தான்வே

நெல்லைக் கிறுக்கன் said...

திடீர்னு ஊரு நியாபகம் வந்துருச்சு வே, அதான் செண்டியாயிட்டேன். அதுவும் நேத்து அம்பை, பாளை, வள்ளியூர்னு நம்ம சொந்தக்காரனுவ கூட பேசினதோட எபெக்ட் வே...

Kumari said...

Arumaiyana Padhivu :)

Naan ovvoru leave mudinju thirumbi varumbodhum, rendankattu, puravaasal poi azhuthittu thaan varuven :)

நெல்லைக் கிறுக்கன் said...

நன்றி குமாரி,
உங்கள மாரி நானும் ஒவ்வொரு லீவு முடிஞ்சு திரும்ப வருதப்போ ரொம்ப சோகமாயிடுவேன். ஊருல இருந்து திரும்பி வந்தும் ஒரு ரெண்டு வாரத்துக்கு, இப்ப அங்க என்ன செஞ்சிட்டு இருப்பாவளோன்னு யோசிப்பேன். வேலை செய்யவே ஒடாது, போன வாரம் இதே நேரம் ஊருல என்ன செஞ்சிட்டு இருந்தோம்னு அசை போட்டுட்டே இருப்பேன்.

அனுசுயா said...

தங்களை ஆறு பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.

சிவா said...

நல்லா சொன்னியப்பூ..மெட்ராசுல நம்ம மக்கா கூட உக்காந்து பேசினா ஒரே ஊர் கதை தான்..அது ஒரு சொகம்வே :-)

நெல்லைக் கிறுக்கன் said...

நன்றி அனுசுயா,
கூடிய சீக்கிரம் ஆறு பதிவு போட்டுருதேன்

நெல்லைக் கிறுக்கன் said...

சிவா,
வாரும் வே. பதிவு ஏதும் போடலைன்னாலும், இப்பிடி அப்பப்ப வந்து உம்ம பின்னூட்டத்த போட்டுட்டு போங்கய்யா...