ஒரு மாசத்துக்கு அப்புறம் இன்னைக்குத் தான் புதுப் பதிவு போடுதேன். வேல விசயமா சிட்னிக்கு வந்து இன்னையோட ஒரு மாசம் ஆச்சு. இப்ப தான் நேரம் கிடைச்சுது. நிலவு நண்பனோட கல்யாணத்துக்குப் போக முடியல, டுபுக்கு அண்ணாச்சியோட நெல்லை மாநாட்டுக்குப் போக முடியாது.
என்ன செய்ய, கடமை என் கையப் புடிச்சு இழுக்குதே...
ஆஸ்திரேலியாவில இப்ப பனிக்காலம். செப்டம்பர் மாசம் வேனிற் காலம் ஆரம்பிக்குமாம். டிசம்பர்ல கோடை காலமாம். ஆச்சரியமான தட்பவெட்ப நிலை.
வழக்கம் போல சிட்னிலயும் நம்ம ஊரு பயக்க நெறய பேரு இருக்காங்க. ரெண்டு தனியார் தமிழ் FM வானொலி இருக்கு. இதெயெல்லாம் விட ரொம்ப அருமயான ஒரு முருகன் கோயில் இருக்கு. வெள்ளிக்கிழம ஆனா நம்ம தமிழ் ஆளுக எல்லாம் ஒன்னு கூடி கோயில்ல சாமி கும்பிடுதாங்க. முழுக்க முழுக்க தமிழ் பாட்டுகள பாடுதாக. குலமிகு கரியது, திருப்புகழ், அம்மையே அப்பா ஒப்பிலா மணியே, ஏறுமயில் ஏறி - இந்த பாட்டுகளயெல்லாம் ஒரு அயல் நாட்டுல கேக்குதப்போ அப்டி புல்லரிக்குது.
இந்த கோயிலக் கட்டினது இலங்கைத் தமிழர்கள். அவுகளுக்கு என் வந்தனம். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடான்னு கத்தனும் போல இருந்தது. சிங்கப்பூருல ஆட்சி மொழி, இலங்கை, மலேசியா, அந்தமான்னு எல்லா ஊருலயும் நம்ம கொடி பறக்குதத ஒரு கனம் மனசு நெனச்சுப் பாத்தது.
அப்புறம் அந்த கோயில்ல பூச முடிஞ்சதும் நம்ம தமிழ் சாப்பாடு கெடைக்கும். இட்லி, வடை, முருங்கக்கா சாம்பார்னு பட்டயக் கெளப்பிட்டானுவ.
இனிமேல பதிவு போட நேரம் கெடைக்குமுன்னு நெனைக்கேன். அப்பப்போ சிங்கார சிட்னியப் பத்தியும் கொஞ்சம் சொல்லுதேன்....
18 comments:
வணக்கம் நெல்லைக்கிறுக்கன்
சிட்னி வரவு நல்வரவாகுக. நானும் சிட்னியில் தான். ஒரு வலைப்பதிவாளர் மாநாடு ஏற்பாடு செய்துடலாமா? ஆம் என்றால் இந்த மெயிலுக்குப் பதில் போடுங்களேன்.
kanapraba@gmail.com
எனக்கு ஆஸ்திரேலியா, சிட்னி ஆகிய இடங்கள் பார்க்கனும்னு ஆசை. இன்னும் வேளை வரலை.
(தப்பா எடுத்துக்காதீங்க. தலைப்பை சிங்கார சட்னினு படிச்சுட்டு சிரிச்சுட்டேன் முதலில். ஸிட்னினு வேணும்னா மாத்துங்க).
சிட்னியில் ஒரு வலைப்பதிவர் சந்திப்பு நடத்த வேணுமெண்டு நானும் விரும்பிறன். இவ்வளவு காலத்துக்குள்ள அப்பிடியொண்டு நடக்காதது பெரிய இழுக்கு.
முந்தி சயந்தன் மெல்பேணிலிருந்து சிட்னி போய் ஷ்ரேயாவோட தொடருந்தில சந்திச்ச சந்திப்புக்குப் பிறகோ முன்போ ஒருத்தரும் இப்படிச் செய்யேல. (மெல்பேணில நாங்கள் ரெண்டு பேரும் சந்திச்சது தொடர்பான ஆர்ப்பாட்டமான பதிவொண்டு இட்டிருந்தோம்)
அண்டைக்கு மெல்பேணில இருந்து நாங்கள் ரெண்டு பேரும் (அருணனும் கொஞ்சநாள் எழுதினார்) சிட்னியில இருந்து ஷ்ரேயாவும் வலைப்பதிந்து வந்தோம். (நட்சத்திரன் செவ்விந்தியன், சந்திரலேகா போன்றோரும் பதிந்தனர். ஆனால் எப்போதாவது ஒரு பதிவு போடுவர்)
இன்று சிட்னியில் வேறும்சிலர் வலைப்பதிகிறார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் கட்டாயம் ஒரு சந்திப்பு நடத்தியே ஆக வேண்டும்.
பொட்டிக்கடை, பிரபா, கனகசிறிதரன், ஷ்ரேயா உட்பட சிட்னிவாழ் வலைப்பதிவர்கள் ஒரு சந்திப்பு நடத்தவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
நா. கண்ணன் வந்தபோதே செய்திருக்க வேண்டும்.
இது முன்னாள் "தென்துருவ தமிழ் வலைப்பதிவாளர் சங்கத் தலைவரின்" அன்புக்கட்டளை.
தங்கள் வருகைக்கு நன்றி கானா பிரபா. உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அணுப்பிருக்கேன். கூடிய சீக்கிரம் நாம் எல்லாரும் சந்திக்கலாம்
வாங்க venkataramani. வருகைக்கு நன்றி. சிட்னி மிக அருமையான் ஊர். சீக்கிரம் வந்து பாருங்கய்யா...
இங்குள்ள தமிழர்கள் எல்லாரும் சிட்னினு தான் உச்சரிக்கிறாங்க.
வசந்தன்,
தங்கள் வருகைக்கும், நீள பின்னூட்டத்துக்கும் நன்றி. எங்க எப்போ நாம சந்திக்கலாமுன்னு சொல்லுங்க. மற்ற சிட்னி நண்பர்களுக்கும் தெரியப் படுத்துங்க. அமர்க்களப்படுத்திரலாம்...
ஏம்ப்பா, அந்த சிட்னிக்குத் தொட்டுக்கறமாதிரி பக்கத்துலே இன்னொரு சட்னி இருக்கே, அதான்
நியூஸி சட்னி, இங்கேயும் ஒரு நடை வந்துட்டுப் போகலாமுல்லெ?
இங்கேயும் வலைப்பதிவாளர் மாநாடு நடத்த ஏற்பாடு செஞ்சுருவொம்லே.
வணக்கம் துளசியக்கா,
வருகைக்கு நன்றி. நான் நியூசிக்கு ஆகஸ்டு மாசம் வந்தாலும் வருவேன். அப்படி வந்தா கண்டிப்பா ஒரு மாநாடு நடத்ட்திரலாம்...
Ayya nellai kirukkare marubadiyum vanthu padaippu pottahutkku nandri. Ungalini padipuukal ellam nallave irukkuthu. Thodarnthu eluthum padi kettukolkiren.
நன்றி நண்பரே!!! தொடர்ந்து எழுதுதேன். உங்க ஆதரவக் கொடுங்க...
இப்பத்தான் உங்க பதிவைப் பார்த்தேன். நீங்க சிட்னியில்தான் இன்னும் இருக்கிறீர்களா?
அதே முருகன் கோவிலுக்கு நாங்கள் ஒவ்வொரு வெள்ளியும் வருவோம். வலைபதிவு கூட்டம் ந்-டடத்தினால் நன்றாக இருக்கும். முடியுமென்றால் பதிலெழுதுங்கள்.
வணக்கம் கஸ்தூரிப்பெண்,
வருகைக்கு நன்றி. இந்த மாசம் ஏதாவது ஒரு சனிக் கிழம நாம் எல்லாரும் சந்திக்கலாம். கானா பிரபாவும் அது பத்தி சொல்லிக்கிட்டு இருக்காரு. மேலும் தகவலறிய என்னோட மின்னஞ்சலுக்கு மடல் அனுப்புங்க. msnswamy@gmail.com
சரி. சந்திப்பைப்பற்றிப் படங்களோட பதிவு போடேலயோ?
வசந்தன் அய்யா,
சந்திப்ப பத்தின் பதிவ இப்பத்தான் தயார் பண்ணிகிட்டு இருக்கேன். சீக்கிரம் போட்ருதேன். 19-ந் தேதி நாங்க சும்மா ஒரு அறிமுகத்துக்காக சந்திச்சி கிட்டோம். இன்னொரு பெரிய மாநாடு சிட்னியில ரெண்டு வாரத்துல நடக்கும். முடிஞ்சா நீங்களும் வாங்கய்யா...
ஐயோ!
இப்ப முடியாதே.
மெல்பேணில இருந்து உங்களுக்கு ஆசிச் செய்தி அனுப்பிறன்.
நான் அங்காலப் பக்கம் வந்தா இன்னொரு சந்திப்பு வைப்போம்.
விடுபட்டுப்போன பொட்டிக்கடையார், கனகத்தார் எல்லாரையும் சேர்த்து ஒரு சந்திப்பை வையுங்கோ.
வசந்தன் அய்யா,
நீங்க இந்த பக்கம் வந்தா கண்டிப்பா இன்னொரு சந்திப்பு வைக்கலாம். பொட்டிக்கடையார், கனக்த்தாரயும் சேத்துக்கிடலாம்...
முன்னாள் தென்துருவ வலைப்பதிவர் சங்க செயலாளராகிய நான் உங்களை வருக வருக என வரவேற்கிறேன். நானும் ஸ்ரேயாவும் தான் முதன் முதலாக சிட்னியில் வலைப்பதிவர் சந்திப்பு நடத்தியவர்கள். அதிலும் ஸ்ரேயா தென்துருவ வலைப்பதிவர் சங்க சிட்னி கிளையின் தலைவர்.
கவனம்.. இரவுகளில் சிட்னி வீதிகளில் தனியே திரியாதீர்கள். அனுபவத்தில சொல்லுகிறேன்.
வணக்கம் சயந்தன் அண்ணாச்சி,
நம்ம பதிவு பக்கம் நீங்க வந்ததுல ரொம்ப சந்தோசம். தலைவர், செயலாளர், கிளைத் தலைவருன்னு ஒரு பெரிய கட்சியே சிட்னில நடக்குதுன்னு நெனக்கிறேன். உங்க வரவேற்புக்கு நன்றி.
//கவனம்.. இரவுகளில் சிட்னி வீதிகளில் தனியே திரியாதீர்கள். அனுபவத்தில சொல்லுகிறேன். //
நான் ராத்திரி பதினொரு மணிக்கு மேல வெளியில சுத்தறது கெடயாது. உங்க அறிவுரைக்கு நன்றி. மேலும் நான் சிட்னில இருந்து போன வாரம்(செப்டம்பர் ரெண்டாம் வாரம்) தான் இந்தியாவுக்குத் திரும்பினேன். அடுத்த முற கண்டிப்பா நாம சந்திக்கலாம்..
Post a Comment