Sunday, August 06, 2006

நண்பர்கள் தினம்...

வலைப் பதிவு செஞ்சுகிட்டு இருக்கிற எல்லாத் தமிழ் மக்களுக்கும் என்னோட நண்பர்கள் தின வாழ்த்துக்கள். உலகம் பூராவும் ஆகஸ்டு 6, நட்பு தினத்த கொண்டாடுதாவ. பெத்தவுககிட்ட கூட பகிர்ந்துகிடாத சில விசயங்கள நம்ம சேக்காளி கிட்ட தான் சொல்லுவோம். TTC தாத்தா நட்புக்கின்னே நாலு அதிகாரம் ஒதுக்கிருக்காருன்னா, அந்த காலத்திலயே அவரு நட்ப பத்தி அலசி ஆராஞ்சிருக்காரு.

பள்ளியூடத்துல கூட ஒன்னா படிச்சவுக கடைசி வர நண்பர்களா இருக்கிறது அபூர்வம். எங்க தாத்தா கூட திருநெல்வேலில படிச்ச இன்னும் ரெண்டு தாத்தாக்கள் சாகுத வரைக்கும் நண்பர்களா இருந்தாக. அவுக போய் சேந்துட்டாலும், அவுக மக்கமாரு இன்னும் நட்போட தான் இருக்காக. குடும்பத்தில ஏதாவது நண்ம தீமயின்னா இன்னைக்கும் வந்து கலந்துக்கிடுவாக.

ஆனா இப்ப உள்ள காலத்துல அந்த மாரி நட்பு வச்சுக்க முடியுமாங்கிறது சந்தேகம் தான். அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியான்னு கண்ணூக்கெட்டாத தூரத்துல இருந்துகிட்டு நட்பு பாராட்டுறது சிரமம் தான். ஆனாலும் மனமிருந்தா மார்க்கமுண்டு. நம்மள்ள எத்தன பேரு இன்னும் பள்ளியூட நண்பர்கள், கல்லூரித் தோழர்களோட எல்லாம் தொடர்பு வச்சிருக்கோம்? அப்படியே தொடர்பு இருந்தாலும், வேலை, கல்யாணம், குடும்பம்னு ஆனவுடனே அந்த பழய தொடர்பு எல்லாம் விட்டுப் போயிடுது. அதுலயும் சில பேரு நல்ல அந்த்ஸ்த்துக்கு வந்தப்புறம்
நாலாங்கிளாஸ்ல கூடப் படிச்சவனயெல்லாம் ஞாபகம் வச்சிக்கிடதது இல்ல.

ஆபிசு நட்பு வேற ஒரு ரகம். இப்பெல்லாம் வருசத்துக்கு ரெண்டு கம்பெணி மாறிகிட்டு இருக்கிற பயக்க, எல்லா பழய கம்பெணி ஆளுகளயும் நினைவுல வச்சுகிடதது பெரிய விசயம் தான். இப்போ ஈ-மெயில், சாட் எல்லாம் இருக்கிறதால, ஒருத்தர ஒருத்தர் தொடர்பு கொள்ளுதது ஒன்னும் பெரிய விசயமில்ல. கூட வேல பாத்த பிள்ளேல ஞாபகம் வச்சுக்கிடுத அளவுக்கு, பயக்கள நாம ஞாபகம் வச்சுக்கிடுதது கெடயாது

தோழனோ, தோழியோ வாழ்க்கத் துணையா அமயுதது அதிர்ஷ்டம் தான். நான் படிச்ச பள்ளியூடம், காலேஜ் எல்லாம் பயக்க மட்டும் படிக்கிற எடமா போச்சு. அதனால ஒரு நல்ல தோழி எனக்கு கெடைக்கதுக்கு வாய்ப்பே இல்லாம போச்சு. நான் மட்டும் இல்ல, திருநெல்வேலில இதே மாரி நெறய துரதிர்ஷ்டசாலிக உண்டு. ஜான்ஸ், சேவியர்ஸ், MDT, சதக்னு பயக்களுக்கு தனியாவும், சாராள்தக்கர், சாரதா, ராணி அண்ணா, ரோஸ்மேரின்னு பிள்ளேளுக்குத் தனியாவும் இன்னும் நெல்லையில அந்த சோகம் தொடருது. எனக்கெல்லாம் சென்னை வருத வரைக்கும் பிள்ளேள் கிட்ட பேசுததே குதிரக் கொம்பா இருந்தது.

கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு தோழிங்கிற பேச்ச எடுக்கவே பயமா இருக்கு. நான் குத்துக்கல்லு மாரி இருக்குதப்போ உங்களுக்கு இன்னொரு ப்பிராண்டு கேக்குதான்னு பாத்திர பண்டமெல்லாம் பறக்குததால என் ஆச நிராசயாவே போச்சு.

ஆகயினால மக்களே இந்த நட்பு தினத்துலயாவது உங்க அங்காளி, பங்காளி, சேக்காளி, கேர்ள் ப்பிராண்டு எல்லாத்தோடயும் பேசுங்க, இல்லாட்டி வாழ்த்தாவது அனுப்புங்க...

8 comments:

நாமக்கல் சிபி said...

//நான் குத்துக்கல்லு மாரி இருக்குதப்போ உங்களுக்கு இன்னொரு ப்பிராண்டு கேக்குதான்னு பாத்திர பண்டமெல்லாம் பறக்குததால என் ஆச நிராசயாவே போச்சு.
//

:(

நெல்லைக் கிறுக்கன் said...

நன்றி சிபி,
நம்ம பக்கம் வந்ததுக்கு

கோவி.கண்ணன் said...

//ஆகயினால மக்களே இந்த நட்பு தினத்துலயாவது உங்க அங்காளி, பங்காளி, சேக்காளி, கேர்ள் ப்பிராண்டு எல்லாத்தோடயும் பேசுங்க, இல்லாட்டி வாழ்த்தாவது அனுப்புங்க... //

நெல்லையார் அவர்களே !
உங்களுக்கும் உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் :)

நெல்லைக் கிறுக்கன் said...

நன்றி கோவி.கண்ணன்,
உம்ம வருகைக்கும், பின்னூட்டத்துக்கும்.
உமக்கும் என்னோட நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

Mr.மாயாண்டி said...

Very nice to here from a nellai person.

நெல்லைக் கிறுக்கன் said...

மாயாண்டி,
உம்ம வருகைக்கு நன்றி வே. நீரு நம்ம ஊரு ஆளா?

kprabhu said...

Hi.. Too good. I am also from kadayam.

நெல்லைக் கிறுக்கன் said...

வாருமய்யா kprabhu,
உம்ம வருகைக்கு நன்றி. நீரு கடயத்துக்காரரா? நம்ம ஊரு ஆளுக தமிழ்மணத்துல நெறய பேரு இருக்காவ இப்போ... உமக்கு கார்த்திக் பிரபு தெரியுமா? அவரும் கடயம்னு சொன்னாரு.