Thursday, August 31, 2006

சிகரம் தொட்ட தமிழன் சரத்பாபு...

பொறியியல் படிப்ப முடிச்சுட்டு, எந்தக் கம்பெணியில சேந்து எத்தன லட்சம் சம்பளம் வாங்கலாம், IIM-ல படிச்சுட்டு எப்படி கோடி கோடியா பணம் சேக்கலாம், ஆடம்பரமான வீடு, சொகுசு கார் வாங்கலாமுன்னு நெனக்குத இன்னைக்கு உள்ள இளய தலமுற ஆளுகளுக்கு மத்தில ஒரு உதாரண புருசன் சரத்பாபு.

சரத்பாபு பத்தி தெரியாதவங்களுக்கு: ரொம்ப ஏழ்மயான குடும்பத்துல பொறந்து, தன்னோட கடுமயான உழைப்பால, BITS Pilani, IIM - Ahmedabad இங்கயெல்லாம் படிச்சுட்டு, லட்ச லட்சமா சம்பளம் கெடக்கக்கூடிய பன்னாட்டு நிறுவனங்களோட வேலய வேண்டாமின்னு உதறித் தள்ளிட்டு, சுயமா தொழில் தொடங்கி தன்ன மாரி வாழ்க்கயில சிரமப் படுதவங்களுக்கு வேல கொடுத்து அவங்க வாழ்க்கய மேம்படுத்தனுமின்னு நெனக்குத ஒரு அற்புதமான பிறவி.

Foodking Catering Service அப்டின்னு அஹமதாபாத்துல ஒரு உணவுக் கூடத்த ஆரம்பிச்சு இப்போ நாப்பது பேருக்கு வேல கொடுத்துகிட்டு இருக்காரு. அவரோட உணவுக் கூடத்தக் குத்து வெளக்கு ஏத்தி தெறந்து வச்சது நம்ம இன்போசிஸ் தல நாராயண மூர்த்தி. அடுத்தால சென்னயிலயும் ஒரு கிளை தொடங்கப் போறாராம்.

குழந்தைப் பருவத்துல அவுக அம்மா, இட்லி வியாபாரம் பண்ணியும், சத்துணவு கூடத்துல மாசம் 30 ரூவாய்க்கு வேல பாத்தும் சரத்பாபுவயும் அவரு சகோதரிகளயும் வளத்து இருக்காக. மடிப்பாக்கத்துல ஒரு சேரிப் பகுதில பொறந்த சரத்பாபு குடும்பச் சூழல், அம்மா படுத சிரமம் எல்லாம் உணர்ந்து நல்லா படிச்சிருக்காரு. பொறியியல் கல்லூரில படிக்க வாங்குன கடன அடைக்க கொஞ்ச நாள் போலாரிஸ்ல வேல பாத்திருக்காரு. அப்புறம் IIM-ல MBA முடிச்சுட்டு இந்த உணவுக் கூடத்த தொடங்கிருக்காரு.

கார், பங்களா ஆடம்பர வாழ்க்யில தனக்கு எப்பவுமே நாட்டம் கெடயாது. தன்னோட லட்சியம் அம்பானி மாரி, நாராயணமூர்த்தி மாரி இருபத்தய்யாயிரம் பேருக்கு வேல கொடுத்து அந்தக் குடும்பங்களோட வாழ்க்கய மேம்ப்டுத்தனுங்கறது தான்னு சொல்லுதாரு. இந்த வருசம் 500 பேருக்கு வேலயும், அடுத்த அஞ்சு வருசத்துல 15,000 பேருக்கு வேல வாய்பும் கொடுக்கது தான் இவருக்கு இப்ப இருக்குத ஒரே லட்சியமாம்.

வியாபார நோக்கத்தோட தொழில் பண்ணாம நம்மால பத்து குடும்பம் நல்லா இருக்கனும்னு நெனக்குத பெரிய மனசு எல்லாத்துக்கும் அதுவும் இந்த சின்ன வயசுல வராது. அயல் நாட்டு மோகத்துல, கண்டதே காட்சி கொண்டதே கோலமின்னு இருக்குத நம்ம இளய தலமுற சரத்பாபுவப் பாத்தாவது திருந்தனும். சரத்பாபுவோட முயற்சி மேன்மேலும் வெற்றியடய நாம் வாழ்த்துவோம்.

இது மாரியே அயிரம் சரத்பாபு தமிழ்நாட்டுல உருவாகனும், தமிழ்ர் வாழ்க்கத் தரம் முன்னேறனும்.... இத மாரி ஏழ்மயான குடும்பத்துல பொறந்த குழந்தைகள முன்னேற்றதுக்கு உங்களால முடிஞ்ச உதவியப் பண்ணுங்கன்னு உங்கள வேண்டிக் கேட்டுக்கிடுதேன்....

18 comments:

Anonymous said...

ஏதோ நம்ம சினி ஸ்டார் ஸ்ரத்பாபு வை பத்தி சொல்றேனு வந்தா, அகமதாபத்தாம் உதாரணமாம். போய்யா டைம வேஸ்ட் பன்னிகினு

லார்ஜ் புஷ்

நெல்லைகிறுக்கன் said...

அய்யா லார்ஜ் புஷ்,
ஒரு சக தமிழன் வறுமயான ஒரு குடும்பத்துல இருந்து முன்னேறி மேல வந்திருக்கான், அதோட மத்தவங்களயும் முன்னேத்தனுமின்னு நெனக்கிறான். இது உமக்கு புடிக்கலயா? நம்மளால அப்படி மத்தவங்களுக்கு உதவி செய்ய முடியலன்னாலும், அப்படி செய்யுதவங்களப் பத்தி மத்தவங்களுக்கு தெரியப் படுத்தலாமேன்னு தான் எழுதுனேன், இதப் படிச்சதால உம்ம நேரம் வீணாப் போச்சுன்னு சொல்றதக் கேக்குதப்போ மனசுக்கு சங்கடமா இருக்கு. ஊக்கப் படுத்தலயின்னாலும் உதாசீனப் படுத்தாதீகன்னு உங்கள வேண்டிக் கேட்டுக்கிடுதேன்.

மருதநாயகம் said...

பெருமை தரும் விஷயம். வாழ்த்துக்கள் சரத்துக்கும் உங்களுக்கும்

நெல்லைகிறுக்கன் said...

மருதநாயகம் அய்யா,
மிக்க நன்றி உங்க வருகைக்கும், பின்னூட்டத்துக்கும்.

kprabhu said...

Hi,
Nice one. What is your name?. Where are you?. What r u doing?. My personal id is: kprabhu_2001@yahoo.com

Please reply me to my personal id. V have started a group in yahoo for kadayam ppl. I will send an invitation. Please give me ur personal id.

Dharumi said...

மனதுக்குள் பாராட்டப் பட்டுக்கொண்டிருந்தவரை பதிவுலகத்திற்குக் கொண்டு வந்தமைக்கு நன்றி
வாழ்த்துக்கள்

நெல்லைகிறுக்கன் said...

பிரபு,
நன்றி. உங்களோட தனி மின்னஞ்சல் முகவரிக்கு நான் கண்டிப்பா பதில் எழுதுதேன்.

நெல்லைகிறுக்கன் said...

வணக்கம் தருமி அய்யா. நம்ம பதிவ நீங்க படிச்சதுல ரொம்ப சந்தோசம். உங்க வாழ்த்துக்களுக்கு நன்றி.

சந்திர S சேகரன். said...

இவரப்பத்தி ஏற்கனவே நிறைய கேட்டு பெருமைப்பட்டிருக்கோம்..
அதப் பதிவு பண்ணினது பாராட்டப்பட வேண்டிய விசயம்..

// தன்னோட லட்சியம் அம்பானி மாரி, நாராயணமூர்த்தி மாரி இருபத்தய்யாயிரம் பேருக்கு வேல கொடுத்து அந்தக் குடும்பங்களோட வாழ்க்கய மேம்ப்டுத்தனுங்கறது தான்னு //
நாலு பேரு நல்லா இருக்கனும்னு தொடங்கன எல்லா காரியத்துக்கும் நிச்சயம் வெற்றி கிட்டும்.. அதுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

அப்படியே இத பதிவு பண்ணின உங்களுக்கு ஒரு ஷொட்டு..

நெல்லைகிறுக்கன் said...

நன்றி சந்திர S சேகரன்.

//நாலு பேரு நல்லா இருக்கனும்னு தொடங்கன எல்லா காரியத்துக்கும் நிச்சயம் வெற்றி கிட்டும்.. //

நீங்க சொல்லுதது நூத்துக்கு நூறு உண்மை.

Dubukku said...

ரொம்ப நல்ல விஷயம்ங்க...நம்க்கெல்லாம் என்னிக்கு இந்த தில்லு/மன உறுதி வரும்ன்னு தெரியலையே...ஹூம்

நெல்லைகிறுக்கன் said...

வாருமய்யா டுபுக்கு அண்ணாச்சி,
ரொம்ப நாள் கழிச்சு நம்ம பக்கம் நீரு வந்ததுல ரொம்ப சந்தோசம்.

//நம்க்கெல்லாம் என்னிக்கு இந்த தில்லு/மன உறுதி வரும்ன்னு தெரியலையே...ஹூம் //

நீரு சொல்லுதது சரி தான் வே. எல்லாத்துக்கும் அந்த மன உறுதி அவ்வளவு லேசுல வராது.

Anonymous said...

Aiya...

aruputhamana padhivu,
ina unarchhigalai thundum padivugal naduve
oru sigaramana padivu.
thodarattum ungal narpani.
vazhthukkal.

vidadhu anbudan.
mayilsamy

நெல்லைகிறுக்கன் said...

மயில்சாமி அய்யா,
நன்றி உங்க வருகைக்கும், மறுமொழிக்கும்.
உங்கள மாரியே இன உணர்ச்சியத் தூண்டுற பதிவுகளப் படிச்சா எனக்கும் வேதனயாத் தான் இருக்கு. என்ன செய்ய?

saamakodanki said...

சரத்பாபுவின் வெற்றி, தமிழ்நாட்டின் வாக்காளர்கள், அதிலும் தலைநகராம் சென்னை வாக்காளர்கள் விழிப்புடன் ஒரு சரியான மாறுதலுக்கு வழி வகுத்து தந்தார்கள் என்ற அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும். சிறிது கூட பிசகாமல் சென்னை இளைஞர்கள் வேகமான ஒன்று திரண்டு சரத்பாபுவுக்காக பிரச்சாரம் செய்ய வேண்டும். வெல்லட்டும் சரத்பாபு

Kanna said...

நல்ல பதிவு...பாராட்டுக்கள்..

நானும் நெல்லைதான்..

நெல்லைக் கிறுக்கன் said...

நன்றி சாமக் கோடாங்கி. நான் மூனு வருசத்துக்கு முன்னாடி போட்ட பதிவ இப்பவும் மக்கள் படிக்கிறத நெனச்சா சந்தோசம்.

நெல்லைக் கிறுக்கன் said...

நன்றி Kanna...

நெல்லையில நீர் எந்த எடம்?