Tuesday, August 22, 2006

சிட்னியில் பண்பாளர்களைச் சந்தித்தேன்...

போன வெள்ளிக் கெழம சிட்னி முருகன் கோயில்ல வச்சு, சிட்னி வாழ் தமிழ் அன்பு நெஞ்சங்கள சந்திக்கதுக்கு ஒரு அருமையான வாய்ப்பு கெடச்சுது. நான் சிட்னிக்கு வந்திருக்கேன்னு ஒரு பதிவு போட்டதும் உடனே சந்திக்கலாமான்னு கேட்டு அன்பு நண்பன் கானாபிரபா பின்னூட்டம் போட்டிருந்தாரு. அவரோட மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் எல்லாத்தயும் கொடுத்து பேசச் சொன்னாரு. ரெண்டு பேருக்கும் வேல அதிகம இருந்ததால பாக்க முடியல, போனிலேயே மூனு வாரங்கள் பேசிக்கிட்டோம். கடைசில போன வாரம் தான் சந்திக்க முடிஞ்சது. இதுக்கிடையில கஸ்தூரிப்பெண் தானும் சிட்னியில இருக்கதா பின்னூட்டம் போட்ருந்தாக. அவுகளும் மழை ஷ்ரேயாவும் தோழிகள். சிட்னி முருகன் கோவிலுக்கு வாங்க நாம எல்லாரும் சந்திக்கலாமுன்னு சொன்னாக. சரி எல்லாரும் சாயங்காலம் 7 மணி வாக்குல கோயில்ல பாக்கதுன்னு முடிவு பண்ணினோம்.

முருகன் கோயிலுக்கு உங்கள நாங்களே வந்து கூட்டிட்டுப் போறோமின்னு, பிரபாவும், கஸ்தூரிப்பெண்ணும் சொன்னாவ, ஆனா எங்க ஆபிசுல வேல செய்யுத ஒருத்தரோட வீடும் கோயிலுக்கு பக்கத்துல இருக்கதால நான் அவர் கூட வந்துருதேன்னு சொன்னேன். ஆனா அந்த புண்ணியவாளரு கடைசி நேரத்துல வேற வேல இருக்குன்னு கைய விரிச்சிட்டாரு. அப்புறம் எங்க ஆபிசு இருக்குத ரோட்ஸ்ங்கிற(Rhodes) எடத்தில இருந்து ரெண்டு டிரெய்ன் மாறி வெஸ்ட்மீட்ல(Westmead) உள்ள முருகன் கோயிலுக்கு ஒரு வழியா வந்து ஏழு மணிக்கு வந்து சேந்தேன்.கோயிலுக்குள்ள உக்காந்து வேடிக்க பாத்துகிட்டு இருந்தப்போ பிரபா செல்போனில கூப்புட்டாரு. அவர சுலபமா அடையாளம் கண்டு பிடிக்க முடிஞ்சுது. அவரப் பாத்ததுமே ரொம்ப நாள் பழகின நண்பன பாக்குதது மாரியே இருந்தது. புதுசா ஒருத்தர் கூட பேசுதோமுன்னு ஒரு வித்தியாசம் தெரியல. ரெண்டு பேரும் பேசிகிட்டிருக்கும் போதே பூச ஆரம்பிச்சது. அப்போ பிரபா, அந்தக் கோயில்ல உள்ள அர்ச்சகர்கள்ல ஒருத்தரான ரவி ஐயாவ அறிமுகப் படுத்தி வச்சாரு. ரவி ஐயா நாகப்பட்டிணத்துக்காரராம் ஏழு வருசத்துக்கு முன்னாடி சிட்னில இந்தக் கோயிலுக்கு அர்ச்சகரா வந்தாராம். இந்த எடம் புடிச்சு போனதால இங்கேயே குடும்பத்தோட தங்கியிருக்காரு. இந்த கோயிலுக்கு அர்ச்சகரா வாரதுக்கு ஒரு நேர்காணல் வச்சாகளாம். அதுல பெரியப் பெரிய வேதம் படிச்ச பண்டிதர்களெல்லாம் வந்திருந்தாங்களாம். நமக்கு எங்க கெடக்க போகுதுன்னு தான் ரவி ஐயா நெனச்சாராம். ஆனா இவரு அருணகிரி நாதரோட திருப்புகழ்ல ஒரு சில வரியப் பாடி தமிழ்ல அதுக்கு அர்த்தம் சொன்னதும் கூட இருந்த எல்லாரும் கைதட்டினாகளாம். உடனே கையோட சிட்னிக்கு கூட்டிட்டு வந்துட்டாகளாம். தமிழ் பாட்டுக்கள் நெறய தெரிஞ்சு வச்சிருக்காரு. தமிழ்லயே அர்ச்சணையும் பண்ணுதாரு. தமிழ்நாட்டுக் கோயில்கள்ல கூட பாக்க முடியாத விசயம் இது.

அப்புறம் மூனு பேரும் கொழும்பு சர்வதேச வானொலி, எம்.ஜி.ஆர், திருச்சி, யாழ்ப்பானம், திருநெல்வேலி பத்தியெல்லாம் பேசிகிட்டு இருந்தோம். திருநெவேலி, மதுர, திருச்சி பக்கமெல்லாம் நம்ம ஆளுக கொழும்பு சர்வதேச வானொலியத் தான் விரும்பி கேப்போம். ஆனா பிரபா இலங்கயில அவரு இருந்த போது நம்ம ஊருல இருந்து ஒளிபரப்பாகுத சென்னை வானொலி, திருச்சி வானொலி, விவித் பாரதி எல்லாம் தான் அதிகம கேப்பாராம். நாங்க இப்பிடி கதச்சுகிட்டு இருக்கும்போது கஸ்தூரிப்பெண்கிட்ட இருந்து செல்லுல அழைப்பு வந்துச்சு. நாங்க நின்னுகிட்டு இருக்குத எடத்தச் சொன்னதும் அவுகளும் சரியா எங்கள வந்து அடயாளம் கண்டு பிடிச்சிட்டாக. ஒருத்தர ஒருத்தர் அறிமுகப் படுத்திகிட்ட பிறகு சிட்னில தமிழ் வழிக்கல்விக்கு கெடைக்கும் முக்கியத்துவத்த சொன்னாக. தமிழ ரெண்டாம் மொழியா எடுத்து படிச்சா இங்க மருத்துவக் கல்லூரிக்கு சுலபமா எடம் கெடைக்குமாம். நம்ம ஊரப் பத்தி நெனச்சுப் பாத்தேன். கொஞ்ச நாளுக்கு முன்னாடி +2வில தமிழ், சமஸ்கிருதம் எடுக்கிறதப் பத்தி தமிழ்மணத்துல சண்டபோட்டு நாறிகிட்ட நம்ம ஆளுக ஞாபகம் வந்தது. வேத்து நாட்டுக்காரன் தமிழுக்கு கொடுக்குத மரியாத கூட நம்ம ஊர்க்காரப் பயலுக கொடுக்குதது இல்லங்கறத நெனச்சு வருத்தமா இருந்தது. நாங்க இப்பிடி பேசிட்டு இருக்கும்போது மழை ஷ்ரேயா கஸ்தூரிப்பெண்ன போன்ல கூப்ட்டு வரதுக்கு கொஞ்ச நேரமாகுமின்னு சொன்னாக. ஆனா இன்னொரு வலைப்பதிவு நண்பரான கார்த்திக்வேலு கோயில் வாசல்ல எங்களுக்காக காத்திருக்குததா சொன்னாக. அவரக் கண்டு பிடிக்குததுலயும் சிரமமில்ல.

கார்த்திக்வேலு கொங்கு நாட்டுக்காரர், பிரபா, மழை ஷ்ரேயா கஸ்தூரிப்பெண் மாரியே இவரும் ரொம்ப நாளா சிட்னியில இருக்குததா சொன்னாரு. பிறகு மலையாளப் படங்கள்ல இருக்கக் கூடிய எதார்த்தம், வங்க மொழிப் படங்கள், சத்தியஜித்ரே பத்தியெல்லாம் பேசினோம். அவுக மூனு பேரும் உள்ளூர்க்காரவுகங்கறதால சிட்னியின் சிறப்பப் பத்தி சொன்னாக. நாங்க கோயிலுக்கு வரும் போது நல்லா இருந்த வானிலை மாறி பயங்கரமா குளிரெடுக்க ஆரம்பிச்சுது. கோயில்ங்கிறதுனால செருப்பு கூட போடாம நின்னதால கால் வெறச்சு போச்சு. கார்த்திக்வேலு கோயம்புத்தூர்க்காரருங்கறதால இந்தக் குளிரெல்லாம் அவருக்கு சாதாரணம்னு நெனக்கேன். கொஞ்ச நேரங் கழிச்சு மழை ஷ்ரேயாவும் அவர் கணவர் கண்ணனும் வந்தாக. அறிமுகப் படலமெல்லாம் முடிஞ்ச பிறகு கொண்டு வந்திருந்த கேமராவுல ஆளாளுக்கு படமெடுக்க ஆரம்பித்தோம், எல்லார் கையிலயும் கேமரா, நெறய படங்கள் எடுத்தோம். வலைப்பதிவர்கள் வரலாற்றுல முத முறையா கோயில்ல வச்சு நடக்கிற சந்திப்பு இதுவாத்தான் இருக்குமின்னு நெனக்கேன். கொஞ்ச நேரம் பேசினதுக்கு அப்புறம் கார்த்திக்வேலு வீடு ரொம்பத் தள்ளி இருக்கதால சீக்கிரமா போகனுமின்னு கெளம்பினாரு.

அவரு போனதுக்கு அப்புறம் நாங்க எல்லாரும் கோயில்ல சாமி கும்பிட்டுட்டு பின்னால இருக்குத இட்லிக் கடைக்குள்ள நுழஞ்சோம். ஆளாளுக்கு பணத்த எடுக்க, பிரபா அவரு தான் எல்லாருக்கும் வாங்கித் தருவேன்னு அன்புக் கட்டள போட்டுட்டாரு. இட்லி, வடை, பூரின்னு நல்லா ஒரு பிடி பிடிச்சோம். இந்த சந்திப்பு ஒரு அறிமுகப் படலம் தான், அடுத்தாப்புல செப்டம்பர் 2-ந்தேதி இன்னொரு பெரிய சந்திப்ப நடத்தலாம்னு தீர்மானம் பண்ணினோம். சாப்பிட்டு முடிச்ச பிறகு பத்து மணி ஆயிட்டுது. எல்லாரும் கெளம்பினோம். கண்ணன் என்னத் தனியா போக வேண்டாம்னு சொல்லி அவரும் ஷ்ரேயாவும் என்ன நான் தங்கியிருந்த ஓட்டல் வாசல்ல கொண்டு விட்டுட்டு போன விருந்தோம்பல் என்ன நெகிழச் வச்சுது. கார்ல வரும் போது ஈழம், சென்னை, சிட்னி பத்தியெல்லாம் கண்ணன் பேசிட்டு வந்தாரு. ரொம்பத் தங்கமான மனுசன்.

மொத்தத்துல அன்னிக்கு நாள் ரொம்ப இனிமயா இருந்துச்சு. எந்த செயற்கத் தனமும் இல்லாம எல்லாருமே இயல்பா இருந்தாக. ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்ல மனுசங்கள பாத்ததுல எனக்கு ரொம்ப சந்தோசம். வலைப்பதிவு செஞ்சுகிட்டு இருக்குத எல்லா நண்பர்களும் உங்க சண்டயெல்லாம் தூக்கி எறிஞ்சிட்டு, ஒத்துமயா இருங்கய்யா... ஈழத்துல உள்ள நம்ம சகோதரர்களுக்காக நாமெல்லரும் ஒன்னு சேரனும். சாதி வெறி, காழ்ப்புணர்ச்சி இதெல்லாம் விட்டுட்டு வாங்கய்யா... மனசுக்குள்ள ஆயிரம் வலி இருந்தாலும் அத வெளிக்காட்டாம சக தமிழன்னு சொன்னா பாசத்த அள்ளிக் கொட்டுத ஈழத் தமிழ் சகோதர சகோதரிகளே உங்க பாசத்த நான் உயிருள்ள வரை மறக்க மாட்டேன்....

42 comments:

வசந்தன்(Vasanthan) said...

// நாங்க இப்பிடி கதச்சுகிட்டு இருக்கும்போது கஸ்தூரிப்பெண்கிட்ட இருந்து செல்லுல அழைப்பு வந்துச்சு.//

உந்தக்கதை ஊரிலயே இருந்ததா அல்லது சிட்னி வந்தபிறகுதானா?

பேசிகிட்டு -> கதைச்சுகிட்டு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பொட்டிக்கடையார் என்னமாதிரி? கடையவிட்டிட்டு வரேலாதாமோ?

நெல்லைக் கிறுக்கன் said...

வாங்க வசந்தனய்யா,
மறுமொழிக்கு நன்றி. உந்தக்கதை சிட்னி வந்த பிறகு தான்.

ரவி said...

நன்றா எழுதி இருக்கீங்க..

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

அழகா எளிமையா சொல்லியிருக்கீங்க.

//ரவி ஐயா//
இரவுப் பூசைக்குப் போனா ரவி ஐயா அழகா அக்கறையா குழந்தையத் தூங்க வைக்கறதுக்கு மாதிரியே முருகனுக்கு "தாலேலோ" பாடுவார். மத்த ஐயாதான் அன்னைக்குப் பூசைன்னா தாலாட்டு சகிக்காது. ஏனோதானோன்னு இருக்கும். :O(

//ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்ல மனுசங்கள பாத்ததுல எனக்கு ரொம்ப சந்தோசம்//
எங்களப் பார்த்ததும் புல்லரிச்சுப் போய்த்தான் அன்னைக்கு அதிகம் பேசாம புன்னகை மன்னனா நின்னீங்களா??? :O))

நெல்லைக் கிறுக்கன் said...

நன்றி செந்தழல் ரவி. நீங்க நம்ம பதிவுக்கு வந்ததுல ரொம்ப சந்தோசம்

நெல்லைக் கிறுக்கன் said...

நன்றி ஷ்ரேயா.
புல்லரிச்சு போனதென்னவோ உண்ம தான். அது என்னமோ தெரில என்ன மாயமோ தெரில உங்கள எல்லாம் பாத்த உடனே தொண்டயில இருந்து வார்த்தயே வரல போங்க :)

கார்திக்வேலு said...

//ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்ல மனுசங்கள பாத்ததுல எனக்கு ரொம்ப சந்தோசம்//
அய்யா அப்ப குளிரல நிஜம்தான், ...ஆனா இப்போ குளிருது :-)

விரிவா உங்க ஊர் நடையில் பதிவு போட்டிருக்கீங்க ..நன்றி .

விருந்துபசரித்த கானாபிரபா / ஷ்ரேயா / கஸ்தூரிக்கும் நன்றி

கார்த்திக் பிரபு said...

thalaiva nanum nellai pakkthil ulla kadayam kiramam than ..appdiye numm pakkam vandhu parunga

கானா பிரபா said...

ஐயா வணக்கமுங்க

நெல்லைப் பாஷைல பொளந்துகட்டீண்டிங்க போங்க, நல்லமனிதர்களுக்குள் நீங்களும் அடக்கம்.
அது சரி, ஷ்ரேயாவின் பூர்விகப்பெயர் ரகசியம் மட்டும் ரகசியமான ரகசியமா? சரி சரி பொழைச்சுப் போகட்டும்.:-)

நெல்லைக் கிறுக்கன் said...

நன்றி கார்த்திக் வேலு. ரெண்டு மாசமா என் கூட ஒரு வட நாட்டுக்காரனும் ஒரு கன்னடக் காரனும் இருந்தானுக. அவனுக வேலயே எப்ப பாத்தாலும் சென்னய மட்டந் தட்றதும் நம்ம ஆளுகளோட ஆங்கில உச்சரிப்ப நக்கல் பண்ணுததும் தான். போன வாரந்தான் ரெண்டு பயக்களும் ஒழிஞ்சு போனானுவ. அவ்னுக கூட இருந்துட்டு உங்களயெல்லாம் பாத்த்வுடனே மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருந்தது.

நெல்லைக் கிறுக்கன் said...

வே கார்த்திக் பிரபு,
வாரும் வே. நீரு கடயத்துக்காரரா? உம்ம பதிவெல்லாம் படிச்சேன். கல்க்குதீரு வே...!!! தொடர்ந்து நல்லா எழுதும்.

நெல்லைக் கிறுக்கன் said...

நண்பா பிரபா,
இந்த சந்திப்புக்கெல்லாம் அடித்தளம் போட்டது நீரு தான வே. உமக்கு என்னோட மனமார்ந்த நன்றி.

ஷ்ரேயாவோட உண்மயான பேர நான் சொன்னா அப்புறம் அவுக வீட்டய்யா கண்ணனோட நெலம திண்டாட்டமாயிரும். ஏன்னா அவரு தான நம்ம கிட்ட ஷ்ரேயாவோட நிஜப் பேர சொன்னாரு..

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

//ஷ்ரேயாவின் பூர்விகப்பெயர் ரகசியம் மட்டும் ரகசியமான ரகசியமா? சரி சரி பொழைச்சுப் போகட்டும்.:-)//

grrr பிரபா!!! :O)

பேரச் சொல்லாம விட்டதுக்கு நன்றி நெ.கிறுக்கன்.

//அவுக வீட்டய்யா கண்ணனோட நெலம திண்டாட்டமாயிரும்.//
இதத்தானே அன்னைக்கும் சொல்லிக்கிட்டீங்க மூணுபேரும்!! :O))

கஸ்தூரிப்பெண் said...

//....கூட இருந்த எல்லாரும் கைதட்டினாகளாம். உடனே கையோட சிட்னிக்கு கூட்டிட்டு வந்துட்டாகளாம்.//
இதுதாங்க நாகப்பட்டிணத்தோட பெருமையே!!!!

//நம்ம ஆளுக கொழும்பு சர்வதேச வானொலியத் தான் விரும்பி கேப்போம்.//
உதயாவின் பாட்டுக்குப் பாட்டு ஞாபகமிருக்கா?

//மழை ஷ்ரேயா கஸ்தூரிப்பெண்ன போன்ல கூப்ட்டு வரதுக்கு கொஞ்ச நேரமாகுமின்னு சொன்னாக.//
பின்ன "சிவாஜி" படபிடிப்புல இருந்து வரட்வேண்டாமா? எப்படி எப்படியோ கேட்டு பார்த்தோம், சிவாஜி ரகசியத்த வெளிவிடல்லயே?

நல்லா எழுதியிருக்கீங்க.

செப்டம்பர் மூணாந்தேதி பிள்ளையாரோடு சந்திப்போம்

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

//சிவாஜி" படபிடிப்புல இருந்து வரட்வேண்டாமா? எப்படி எப்படியோ கேட்டு பார்த்தோம், சிவாஜி ரகசியத்த//

படத்தெப் பாத்து நேரத்த மண்ணடிக்காதீயன்னு சொன்னாக் கேக்கயா போறீக? :O))
(ரசினித் தாத்தா விசிறிக வந்து எனக்கு விசிற முன்ன ஓடிர்றேன்!!) ;O)

நெல்லைக் கிறுக்கன் said...

நன்றி கஸ்தூரிப்பெண்,
உதயாவின் பாட்டுக்கு பாட்டு நல்லா ஞாபகம் இருக்கு...

பிள்ளயார் சதுத்தி விழா 3-ந் தேதின்னு ஞாபகப் படுத்தினதுக்கு நன்றி

நெல்லைக் கிறுக்கன் said...

ஷ்ரேயா,
நல்ல படத்த பாத்து நேரத்த மண்ணடிக்கலாம் தப்பில்ல. ஆனா தமிழ்ல நல்ல படம் வந்து ரொம்ப நாள் ஆச்சு. உம்ம்ம்ம்...

ரஜினியத் நீங்க தாத்தான்னு சொல்லுதது ஒரு வகயில சரி தான், ஏன்னா அவரு பொண்ணு ஐஸ்வர்யா மூலமா நெசமாவே அவரு தாத்தா ஆகப் போறாரு. ஆனா நடிப்புன்னு வந்துட்டா எப்பவுமே அவருக்கு வயசு பதினாறு தான்...

இதெப்பிடி இருக்கு...

பரத் said...

//தமிழ் பாட்டுக்கள் நெறய தெரிஞ்சு வச்சிருக்காரு. தமிழ்லயே அர்ச்சணையும் பண்ணுதாரு. தமிழ்நாட்டுக் கோயில்கள்ல கூட பாக்க முடியாத விசயம் இது.//
//சிட்னில தமிழ் வழிக்கல்விக்கு கெடைக்கும் முக்கியத்துவத்த சொன்னாக. தமிழ ரெண்டாம் மொழியா எடுத்து படிச்சா இங்க மருத்துவக் கல்லூரிக்கு சுலபமா எடம் கெடைக்குமாம்//
கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது
அருமையா எழுதியிருக்கீங்க

நெல்லைக் கிறுக்கன் said...

வருகைக்கு நன்றி பாரத்... உங்கள மாரியே இந்த விசயத்த கேட்டப்போ நானும் ரொம்ப சந்தோசப் பட்டேன்.

நெல்லைக் கிறுக்கன் said...

வாங்க சந்திரசேகரன்,
வருகைக்கும் மறுமொழிக்கும் ரொம்ப நன்றி. உம்ம கடைசி வரிகள படிச்சு விழுந்து விழுந்து சிரிச்சேன். நல்ல பதிவுகள் உம்மகிட்ட இருந்து வருமின்னு எதிர் பாக்குரேன்.

வசந்தன்(Vasanthan) said...

//ஷ்ரேயாவின் பூர்விகப்பெயர் ரகசியம் மட்டும் ரகசியமான ரகசியமா? சரி சரி பொழைச்சுப் போகட்டும்.:-)//

grrr பிரபா!!! :O)

பேரச் சொல்லாம விட்டதுக்கு நன்றி நெ.கிறுக்கன்.

//அவுக வீட்டய்யா கண்ணனோட நெலம திண்டாட்டமாயிரும்.//
இதத்தானே அன்னைக்கும் சொல்லிக்கிட்டீங்க மூணுபேரும்!! :O))

________________
ஏன் எங்களுக்குத் தெரியாதாக்கும்?
உங்கட படத்தையே எடுத்து வெளியிட்ட எங்களுக்கு இது என்ன பெரிய வேலையா?

துளசி கோபால் said...

இங்கே பக்கத்தூருலே( சரி, நாட்டுலேன்னு வச்சுக்கலாம்)யும் நல்ல மனுசி இருக்காங்கன்னு ஞாபகம் இருக்கா?

எப்ப வர்றீங்க?

கானா பிரபா said...

இது கொஞ்சம் ஓவருப்பா, அவங்க நேரில ஷ்ரேயா ரெட்டி மாதிரித் தான்:-(

Pot"tea" kadai said...

lemme know about ur next meet...if possible!

துளசி கோபால் said...

நீங்க இந்தியாவுக்குத் திரும்பிப் போயாச்சா? இல்லை அங்கெ சிட்னியில்தான் இருக்கீங்களா?

நெல்லைக் கிறுக்கன் said...

வாங்க பொட்டிக்கடயாரே,
நான் சிட்னியில இருந்து போன வாரம் தான் இந்தியா வந்தேன். உங்களப் பத்தி கானா பிரபா, வசந்தன் அய்யா எல்லாரும் நெறய சொன்னாங்க. இந்த தடவ சந்திக்க முடியலன்னாலும் அடுத்த தடவ கண்டிப்பா சந்திக்கலாம். நீங்க எப்ப இந்தியா வந்தாலும் தெரியப் படுத்துங்க.

நெல்லைக் கிறுக்கன் said...

துளசியக்கா,
இந்த தடவ என்னால பக்கத்தூருக்கு வர முடியல. அடுத்தால வரும் போது கண்டிப்பா அங்க வரேன். நான் சிட்னியில இருந்து இந்தியா வந்து ஒரு வாரம் ஆச்சு. கெளம்பறதுக்கு முன்னாடி உங்க எல்லாத்துக்கும் சொல்லனும்னு நெனச்சேன். கடசி நேர அவசரத்துல மறந்து போயிட்டேன். நீங்க அடுத்து எப்போ சென்னை வருவீங்க?

நெல்லைக் கிறுக்கன் said...

கானா பிரபா,
நீங்க சொல்லுதது நூத்துக்கு நூறு சரி. நேரிலயும் அம்மணி ஷ்ரேயா ரெட்டி மாதிரி இருக்காங்கங்கறது உண்ம தான்..

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நெல்லைக் கிறுக்கர்!
சில மணிதான் ! எங்கட ஈழத்தமிழரோட கூட இருந்திருக்குறீங்க ஆனா! நல்லா எங்க தமிழ் கதைக்கப் பழகிட்டீங்க!
வாசிக்க வாசிக்க நல்ல சோக்காயிருந்தது;உங்க விபரிப்பு.
யோகன் பாரிஸ்

வசந்தன்(Vasanthan) said...

ஐயாமாரே,
நீங்கள் சொல்லும் ஷ்ரேயா ரெட்டி "திமிரு" படத்தில் வந்த வில்லி.
எங்கட அம்மணியும் அப்படியா இருப்பா?

நான் போட்ட படம் வேற ஷ்ரேயாவின்ர.

நெல்லைக் கிறுக்கன் said...

வாங்க யோகன் அண்ணாச்சி,
வருகைக்கு நன்றி!!!
ஈழத்துக்கும் திருநெல்வேலிக்கும் நெருங்கின தொடர்பு உண்டு. எங்க மூதாதயர்கள் நெறய பேரு கொழும்புல வியாபாரம் பண்ணிருக்காங்க. 1950 வர அங்க தான் நம்ம ஊரு ஆளுக நெறய பேரு இருந்திருக்காக. அதனால எனக்கு ஒரு இனம் புரியாத பாசம்.

மேலும் திருநெல்வேலி, தூத்துக்குடி வட்டார பேச்சு வழக்கு யாழ்ப்பாணத்தோட ரொம்ப ஒத்துப் போகும். சமயல எடுத்துக்கிட்டா அங்க மாரியே இங்கயும் சொதி எல்லாம் உண்டு.

சிட்னில ஈழத்துச் சகோதரர்களோடு பழகின பிறகு அவங்களோட விருந்தோம்பல் பண்ப நெனச்சு மிகவும் நெகிழ்ந்தேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நெல்லைக் கிறுக்கரை நெகிழவைத்த! அருமை நண்பர்களே! எம் தாய் மண்ணின் விருந்தோம்பலுக்கு நீவிர் பெருமை சேர்த்துள்ளீர்கள்.
அனைவருக்கும் நன்றி!
யோகன் பாரிஸ்

நெல்லைக் கிறுக்கன் said...

வசந்தன் அய்யா,
நான் சிவாஜி ஷ்ரேயா மாதிரி இருக்காங்கன்னு தான் சொன்னேன். ஷ்ரேயா ரெட்டின்னா வில்லிங்கறத அயத்துப் போனேன். இப்பிடி ஒரு உள்குத்து இருக்கது என்க்கு தெரியாமப் போச்சே.....

Anonymous said...

Wow you were in Sydney!!!
Looks like Kanaprabha anna knows every1
:)

நெல்லைக் கிறுக்கன் said...

நான் சிட்னியில ஒரு மூனு மாசம் இருந்தேன். நீங்க இப்போ தான் அங்க வந்தீகளா இல்ல ரொம்ப நாளா இருக்கீயளா?

பிரபாவின் மாதிரி ஒருத்தரோட நட்பு கிடைச்சதுல எனக்கு ரொம்ப சந்தோசம்

சின்னக்குட்டி said...

//வசந்தன் அய்யா,
நான் சிவாஜி//

வசந்தன் அய்யாவா..... வயது வந்த ஆளா... அறிய தந்தமைக்கு நன்றி நெல்லை கிறுக்கன்,

சந்திப்பு பற்றிய பதிவு நன்றாயிருந்தது..நன்றிகள்

வசந்தன்(Vasanthan) said...

அடப்பாவியளா!

கானாபிரபாவை சும்மா கூப்பிட்டுப்போட்டு என்னை ஐயா போட்டுக்கூப்பிட்டுக் கிழவனாக்கிப் போட்டியளே???

கானா பிரபா said...

வசந்தன்

சரி சரி என்ன இருந்தாலும் மூத்த குடிமகன் நீங்கள் இதுக்கு போய் கவலைப்படலாமே:-)

நெல்லைக் கிறுக்கன் said...

சின்னக்குட்டி,
வருகைக்கு நன்றி. வசந்தன் அய்யா தென் துருவ வலைப்பதிவர் சங்கத்தின் மூத்த உறுப்பினர்ங்கறதால தான் அய்யான்னு மரியாத. மத்தபடி அவரு என்றும் பதினாறு தான்...

நெல்லைக் கிறுக்கன் said...

வசந்தன் அய்யா/பிரபா,
சின்னக்குட்டிக்கு நான் சொன்ன பதில் சரி தானே...?

வசந்தன்(Vasanthan) said...

மணலாறு விஜயனின் "வணங்காமண்" என்ற புத்தகம் முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டியதொரு படைப்பு அல்லது தொகுப்பு.

வசந்தன்(Vasanthan) said...

'தென்துருவ' வலைப்பதிவர் சங்கத்தைத் தொடக்கினதாலயும் அதின்ர மூத்த உறுப்பினர் எண்டதாலயுந்தான் என்னை ஐயா எண்டுறியள் எண்டாச் சரிதான்.
அதுசரி, இப்பவும் அந்தச் சங்கம் இயங்குதோ?
__________________
முதல் வந்த பின்னூட்டம் வேற இடத்துக்குரியது.