Thursday, October 26, 2006

சென்னை நகர்வலம்

சிட்னியில இருந்து திரும்பி வந்து ஒன்னரை மாசம் கழிச்சு இப்போ தான் அடுத்த பதிவு எழுத முடிஞ்சுது. நேரமில்லாதது ஒரு காரணம், இன்னொன்னு சென்னைக்கும் பெங்களூருக்கும் மாத்தி, மாத்தி ஒரே அலைச்சல்.

தீபாவளிக்கு சேந்தாப்புல நாலு நாள் லீவு கெடச்சதால, சென்னைக்கு போய் நல்லா சுத்த முடிஞ்சுது. வடகிழக்கு பருவமழை ஆரம்பிச்சிட்டதால அவ்வளவா வெக்கையோ, புழுக்கமோ இல்ல. ஆனாலும் மழை ஒரு நாள் பெஞ்சதுக்கே, ரோடெல்லாம் என்னப் பாரு என் அழகப் பாருன்னு அலங்கோலமா இருக்கு. ஏழு மாசத்துக்கு முன்னாடி போட்ட ரோட்டுக்கே இந்த நெலம.

சென்னை ஆட்டோ க்காரங்க இன்னும் மாறாம அதே மாதிரி தான் இருக்காங்க. சென்ட்ரலுல இருந்து வீட்டுக்கு வரும் போது ஆட்டோ க்காரர் நூறு ரூபாய்னு பேசி, வார வழியில அதுவும் பத்தலயின்னு கூட ரெண்டு பேர ஏத்திக்கிட்டாரு. ஆனா பெங்களூர் ஆட்டோ க்காரங்கள விட ஒரு வகயில இவங்க பரவாயில்ல. ராத்திரி 9 மணிக்கு மேல ஒன்னரை சார்ஜ், 12 மணிக்கு மேல டபுள்னு நல்லா கொள்ளையடிக்கானுவ அங்க. இதுல வயித்தெரிச்சல் என்னான்னா சென்னை - பெங்களுர் ரயில், பஸ் எல்லாமே அதிகால 4 - 5 மணிக்கு போறதால சில சமயம் ரயிலுக்கு கொடுக்குத காசுல முக்காவாசி ஆட்டோ வுக்கு கொடுக்க வேண்டியிருக்கு.

இந்த தீபாவளி ரொம்ப செழிப்புங்கறத சென்னை மக்கள் அதக் கொண்டாடுன விதத்துலயே தெரிஞ்சுது. அய்யாயிரம் வாலா, பத்தாயிரம் வாலா சர வெடி எல்லாம் சர்வ சாதாரணம். ராத்திரி நடந்த வான வேடிக்கை இதுவரை நான் என் வாழ்நாள்ல எந்த தீபாவளிக்கும் பாத்திராத ஒன்னு. சாப்ட்வேர், BPO, கால் சென்டர்னு வேல பாக்குத இளசுக பணத்த தண்ணியா செலவு பண்ணுதது கண்கூடா தெரிஞ்சுது.(இந்தியா ஒளிர்கிறது...!!!). காசக் கரியாக்குதது இப்படித்தான் போல.

ஸ்பென்சர் பிளாசா வர வர மீன் மார்க்கெட் மாதிரி ஆயிட்டு வருது. அதுலயும் லாண்ட்மார்க் உள்ள எப்ப போனாலும் ஒரு திருவிழா கூட்டம் தான். சென்னை சிட்டி சென்டர், அமஞ்சிக்கரயில கட்டிக்கிட்டு இருக்குத மல்டிபிளக்ஸ் இதெல்லாம் வந்த பிறகாவது கூட்டம் குறையுமான்னு தெரியல. முன்னாடியெல்லாம் இந்த மாதிரி பெரிய ஷாப்பிங் மால்கள்ல எல்லாம் நுனிநாக்கு ஆங்கிலம் பேசுத பிள்ளேல், பயக்க நெறய பேரு வேல பாத்துட்டு இருந்தாங்க. ஆனா இப்போ கால் சென்டர் வேலயில்லாம் வந்த பிறகு அந்த மாதிரி ஆளுக ஒருத்தரக் கூட பாக்க முடியல.

சென்னை மாநகரக் காவல் துறைக்கு, ரோந்து போகதுக்குன்னு, 100 ஹூண்டாய் அக்ஸென்ட் காருகள தமிழக அரசு கொடுத்திருக்கு. இனிமேல் நம்ம ஆளுகளும் FBI ரேஞ்சுக்கு மாறிடுவாங்கன்னு நெனக்கேன்.

4 comments:

Anonymous said...

ஹூண்டாய் ஆக்ஸன்ட்ல NYPD ரேஞ்சுக்கு நம்ம போலீசெல்லாம் வலம் வராங்க!
சென்னை ரொம்ப டெவலப் ஆயிடுச்சு. ஆனால் சாலைகள் மட்டும் இன்னும் 20 வருஷம் பின்னாலேயே தங்கிடுச்சு.

நெல்லைக் கிறுக்கன் said...

வாங்க தீபக்... வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி!!!

சாலைகளோட பரிதாபமான நெலம இந்த ஊழல் காண்ட்ராக்டருங்க, அரசியல்வாதிக இருக்க வரைக்கும் அப்படியே தான் இருக்கும். இந்தியன், அன்னியன் மாதிரி யாராவது வந்தா தான் மக்களுக்கு விடிவு காலம் பொறக்கும்...

கானா பிரபா said...

சென்னைக்கு நான் வந்தால் நம்மூருக்கு வந்தது போன்ற உணர்விருக்கும்.

நெல்லைக் கிறுக்கன் said...

அடுத்த தடவ நீங்க இந்தியா வரும்போது நெல்லை, மதுரை பக்கமும் கொஞ்சம் வாங்க... அப்படியே உங்க ஊரு சாயல் இருக்கும்.