ரொம்ப நாளா நம்ம பயக்க எல்லாம், என்ன ஒரு நல்ல காதல் கதய எழுதச் சொல்லி புழுப் புழுன்னு அறிச்சிக்கிட்டே இருக்கானுவ. ஒரு வேளை என்னப் பாத்தா நெறய காதல் பண்ணின அணுபவம் உள்ளவன் மாதிரி தோனுதா இல்ல வடிவேலு மாதிரி என்ன வச்சு காமடி கீமடி பண்ணுதானுகளான்னு தெரியல. இப்போ வேற கார்திக, மார்கழின்னு ஒரே ரொமாண்டிக் மாசமா வருதா, அதான் நாமளும் ஒரு கதய எழுதி தான் பாப்பமேன்னு உக்காந்துட்டேன். சரி இப்ப நம்ம காதல் கதைக்கு வாரேன்.
அது ஒரு மார்கழி மாசம். நல்ல விரையல் காத்து, எதுக்க உள்ளவனக் கூட பாக்க முடியாத அளவுக்கு ஒரே பனி. திருநெல்வேலி, தியாகராச நகர்ல எல்லா வீட்டு வாசலிலயும் சானிப் பிள்ளையார் தலைல செம்பருத்தி, அரளிப் பூன்னு வெத வெதமா வச்சுகிட்டு ஜம்முன்னு உக்காந்திருந்தாரு. கல்யாணம் ஆகாத பெரிய அக்காக்களெல்லாம் குளிச்சி முழுகி, ஈரத்தலய அள்ளி பான்கொண்ட போட்டுகிட்டு, தெருவ அடைக்க மாதிரி பெரியப் பெரிய கலர்க் கோலம் போட்டுகிட்டு இருந்தாவ.
நெறய வீடுகள்ல திருப்பாவ, திருவம்பாவ படிக்குத சத்தம் கேட்டுது. மார்கழி மாசத்துல அதிகாலயில திருப்பாவ, திருவம்பாவ படிச்சா நல்ல புருசன் கெடப்பான்னு ஒரு ஐதீகமாம். அதுவும் கண்ணனத் தன் காதலனா நெனச்சு ஆண்டாள் பாடின திருப்பாவய கேட்டா கடவுளுக்கு காதல் வருதோ இல்லயோ ஊருல்ல உள்ள எளந்தாரிப் பயக்களுக்கெல்லாம் கமல் வசூல் ராஜாவுல சொன்ன மாதிரி ஒரு ஃபீலிங் வந்துரும்.
பிள்ளையார் கோவில்ல இருந்து பெரியசாமியா பிள்ள தாத்தா தலமயில ஒரு கூட்டம் பஜன பாடிக்கிட்டே வடக்குத் தெருவுக்கு போச்சுது. நண்டு, நாழியில இருந்து, வயசானவுக வர ஒன்னு சேரப் பாடுதத பாக்கதுக்கு இந்த ஒரு ஜென்மம் போதாது. மார்கழி மாசத்துல தெய்வங்கள் எல்லாம் மண்ணூக்கு வந்து டேரா போட்டுருவாகளோ என்னமோ, அதான் வேற எந்த மாசத்துக்கும் இல்லாத சிறப்பு மார்கழிக்கு மட்டும் இருக்கு. பஜன கோஷ்டி எல்லாத் தெருவயும் வலம் வந்த் பிறகு பிள்ளயார் கோவிலுக்கு போயி ஒரு அர மணி நேரம் பூச நடக்கும். அப்புறம் பிரசாதம், சுடச்சுட தொன்னயிலயும், இலயிலயும் கொடுப்பாக சங்கர பாண்டி அய்யாவும், மணி மாமவும்.
இப்படி ரம்மியமான மார்கழி மாசத்துக் காலப் பொழுதுல நம்ம சிவா காலயிலேயே குளிச்சி முழுகி, திருநீரு பூசிக்கிட்டு தன்னோட சைக்கிள எடுத்துகிட்டு கெளம்பினான்.
தொடரும்......
10 comments:
அடடா!... இப்படி சட்டென்று தொடரும் என போட்டு விட்டீங்களே?
நன்றி சந்தியா... ஒரு வாரம் பொறுத்து இருங்க, அடுத்த வாரம் இன்னும் நெறய சமாச்சாரங்கள் எல்லாம் வரும்.
தல
திருநீறெல்லாம் பூசிப் பக்திபூர்வமா ஆரம்பிச்சிருக்கீங்க:-)
ஆவலோடு அடுத்தபாகத்தை எதிர்பார்க்கின்றேன்.
ஒருத்தி மகனாய்ப் பிறந்து, சிற்றஞ் சிறுகாலை, மார்கழித் திங்கள் போன்ற பாடல்களை மார்கழியில் கேட்பது அலாதி இன்பம்.
ரகு
Your narration about *Marghazhi* is very good. It remembers me my childhood days...
Abhi
பிரபா,
நண்பர் ஜேம்ஸ் கலை அன்னைக்கூ நாம ஹெலன்ஸ்பர்க் போயிட்டு வரும் போது காதல் கத எழுதச் சொன்னாரே அதனால தான் எழுதுதேன். இந்தக் கத அன்பர் ஜேம்ஸ் கலை, மற்றும் எனது மற்ற நண்பர்கள், மற்றும் உங்களுக்கு அர்ப்பணம்.
கத நல்லாயில்லேன்னா என்ன கெட்ட வார்த்தயில திட்டிடாதீங்க...
ரெண்டு அனானி நண்பர்களுக்கும் என் நன்றி.
பரவயில்லையே திருப்பாவ பாட்டுக்கள்யெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கீகளே.
தொடர்ந்து கதயப் படிங்க...
rombavE choodu eththureenga!!!
uvi
Post a Comment