நாலாங் காதல்: கணேசனும், சுப்பய்யாவும் அண்ணன் தம்பி. ரெண்டு பேரும் பாசக்காரப் பயலுவ. ஆனா ஜாலக்கார ஜமுனாவான ரீட்டாங்குத பிள்ளைக்காக ரெண்டு பேரும் அடிச்சிகிட்டு ரோட்டுல சட்டய கிழிச்சுகிட்டானுவ. அதுக்கு காரணம் ரீட்டா அந்த ஊரு பஸ் ஸ்டாப்புக்கு வந்து கணேசனப் பாத்து பல்லக் காட்டிட்டு, அப்புறம் அவன் தம்பி சுப்பய்யாவுக்கு டாட்டா காட்டிட்டு வார பஸ்சு எதுலயும் ஏறாம எல்லா பயக்க கண்ணுலயும் மண்ணத் தூவிட்டு ஊருக்குள்ள போயிட்டா. ஆனா அது தெரியாத ரெண்டு பயக்களும் ரீட்டா என்னத்தான் லுக்கு விட்டான்னு பஸ்சுக்குள்ளயே ஒருத்தன் குதவலய ஒருத்தன் நெறிச்சு அது பத்தாதுன்னு பஸ்ச நிப்பாட்டச் சொல்லி நடு ரோட்டுல கெடந்து உருண்டானுவ. கணேசனுக்கு ஆதரவா ஒரு கும்பலும், சுப்பய்யாவுக்கு ஆதரவா ஒரு கும்பலும் ஊருக்குள்ளத் திரிஞ்சானுவ. இதயெல்லாம் பாத்துட்டு அவங்க அய்யா "சவுத்துப் பயக்க வீட்ல அடங்கலயின்னா ஊருல தான் அடங்குவானுவன்னு" கையக் கழுவிட்டாரு. கடசியில ரெண்டு பேரும் ஒரு ஒப்பந்தம் போட்டானுவ. மறுநாள் பஸ் ஸ்டாப்ல வச்சு ரீட்டாகிட்ட போய் யார உனக்கு புடிச்சிருக்குன்னு கேப்போம். அவ புடிச்சிருக்குன்னு சொன்ன பயலுக்கு ரீட்டாவ விட்டுக் கொடுத்துட்டு இன்னொரு பய ஆட்டைல இருந்து வெளகிரனும்னு முடிவாச்சு. அடுத்த நா காலயில ரெண்டு கோஷ்டியும் 7 மணியில இருந்தே பஸ் ஸ்டாப்ல காவல் காக்க ஆரம்பிச்சிட்டானுவ. மத்யானம் வர காத்திருந்தும் ரீட்டா வார பாடா இல்ல. உடனே ரெண்டு பயக்களும் பொறும இல்லாம, அங்க இங்க விசாரிச்சு நேர ரீட்டா வீட்டுக்கே போய் கதவ தட்டுனானுவ. கதவத் தெறந்து இவனுகள பாத்த ரீட்டா மயக்கம் போட்டு விழாத குற தான். இப்பவே உன் முடிவச் சொல்லு, நானா? இவனா? இன்னைக்கு ரெண்டுல ஒன்னு தெரியாம போமாட்டோம் அப்டின்னு கணேசன் கத்த, வீட்டுக்குள்ள இருந்து பயில்வான் ரங்கநாதன் ரேஞ்சுக்கு ஒரு மாக்கான் வந்து நின்னான். எலேய் உங்களுக்கு முடிவுதான தெரியனும், இந்தா தெரியப் படுத்துதேன்னுட்டு வெறகு கம்ப எடுத்து கண்ணு மண்ணு தெரியாம விளாசித் தள்ளிட்டான். ஆனா பாவம் அண்ணன் தம்பி ரெண்டு பேருக்குமே ரீட்டாவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி ஒரு குழந்த இருக்குங்கற விசயம் அதுக்கப்புறம் தான் தெரிஞ்சுது.
அஞ்சாங் காதல்: என்னடா பயக்களோட இலவ மட்டுமே சொல்லுதானே, பிள்ளேளோட காதல சொல்லலியேன்னு யோசிக்காதிய... அந்த குறையத் தீக்க கடைசி ரெண்டுக் காதலும் பிள்ளேளோடது தான். கஜப்பிரியான்னா எங்க ஊருல ரொம்ப பிரபலம். ஒம்பதாங் கிளாசு உரசுமேரி பள்ளியூடத்துல படிக்கும்போதே அப்போ +2 படிச்சுகிட்டு இருந்த தருமனோட தனியா உல்லாசச் சுற்றுலா ஒரு வாரம் போயிட்டு வந்து ஊருக்குள்ள பரபரப்பு உண்டாக்கினவ. பேசுதது எல்லாம் பொய்யத் தவிர வேற ஒன்னும் கெடயாது. "இப்பத் தான் நடிகர் பிரசாந்தோட போன்ல பேசிட்டு இருந்தேன்னு வாய் கூசாம பொய் சொல்லுவா. அவ கண்ணுல வந்து மாட்டினான் அப்பாவிப் பயலான அப்பூண்டு ஆறுமுகம். குனிஞ்ச தல நிமிராம தெருவில நடக்குத பய. பொட்டப் பிள்ளேள் கிட்ட பேச மாட்டேன்னு அவுக பாட்டிக்கு சத்தியம் பண்ணிக் கொடுத்தவன் ஆறுமுகம். அப்படிப்பட்ட பயல கொஞ்சங் கொஞ்சமா பேசி மனச மாத்தி அவ வலயில விழ வச்சா கஜூ. அப்பூண்டு ஆறுமுகத்த பின்னாடி உக்கார வச்சு கயத்தாறு, கங்ககொண்டான் ரோட்டுல அவ சன்னில(Sunny) வேகமாப் போறான்னு தகவல் வர ஆரம்பிச்சுது. காணாததக் கண்ட மாதிரி அப்பூண்டு பயலும் கொஞ்ச நாலா சந்தோசமா அலஞ்சான். வெள்ளக் கலரு பூடிசு, கருப்புக் கண்ணாடி எல்லாம் ராத்திரி போட்டுட்டு ராஜபார்வைக் கமல் மரரி ஊருக்குள்ள ஒரு தினுசா சுத்திட்டு இருந்தான். கேட்டா கஜூவுக்கு அது தான் புடிக்கும்பான். நம்ம பயக்களும், "அடப் பயவிள்ள அந்த செருக்கிக்காக ராத்திரியும் ஏமுல கருப்புக் கண்ணாடியப் போடுதேன்னு" கேட்டுப் பாத்து சலிச்சு போய்ட்டானுவ. அப்பூண்டு இப்பிடி கஜூவோட சுத்துதது அவளோட முன்னாள் காதலனுவ நாலஞ்சு பயக்களுக்குத் தெரிய வந்துச்சு. கடுப்பான அவனுக எல்லாம் சேந்து அப்பூண்டு ஆறுமுகத்தத் தனியா கூட்டிட்டு போயி முன் மண்டயில பாதி முடியயும், பாதி மீசயயும் செரச்சு அணுப்பிட்டானுவ. அதுக்கு அப்புறம் அப்பூண்டு கஜூ மட்டுமில்ல எந்தப் பிள்ளய எதுக்க பாத்தாலும் தல தெறிக்க ஒடுதான்...
ஆறாங் காதல்: ரோசின்னு எங்க ஊர்ல ஒரு பிள்ள இருந்தது. அவங்க அய்யா திருநெல்வேலில பெரிய மாட்டு டாக்டரு. ரோசியோட மனசுல ஆசய வளத்தது வெள்ளப் பாண்டின்னு ஒரு வெளங்காத பய. தெனமும் காலேசுக்கு போற மாரி பஸ்சுல வருவான், கலர் கலரா சட்டை பேண்ட்டு போட்டு எப்பவும் புட்போர்ட்ல தொங்கிட்டே தான் திரியுவான். ரொம்ப நாள் கழிச்சு தான் அவன் படிக்கிறது டியூட்டோரியல் காலேசுன்னு எங்களுக்கு தெரிஞ்சுது.ஆனா அதுக்குள்ள காரியம் கைய மீறி போயிட்டுது. ரோசிக்கு அவன் மேல இலவு வந்து, ரெண்டு பேரும் பஸ்லேயே காதல் பண்ண ஆரம்பிச்சாவ. அவன் கேக்குதப்ப எல்லாம் அம்பது, நூறுன்னு அவனுக்கு ரூவாயக் கொடுத்து அவன காதலிச்சா அந்த புண்ணியவதி. ஒரு நாள் ஆயிரம் ரூவா வேணுமின்னு ஒயிட்டு கேட்டதும் அவளால புரட்ட முடியல. உடனே வெள்ளையும் அவளும் சேந்து ஒரு திட்டம் போட்டாவ. அது என்னான்னா, ரோசி வீட்ல அவங்க அய்யா வாங்கிருக்க ஆயிரத்து ஐநூறு ரூவா மதிப்புள்ள ராசபாளயம் நாய வெள்ள திருடி விக்கனும். வார காசுல வெள்ளைக்கு ஆயிரம், ரோசிக்கு மிச்சமின்னு முடிவாச்சுது. ரோசி வீட்ல எல்லாரும் ஊருக்கு போற ஒரு நாள் பாத்து வெள்ள அங்க திருடப்போனான். நாய எப்பிடியோ புடிச்சு கொண்டு போய் தச்சநல்லூர்ல வித்துட்டு வந்துட்டான். ஆனா அவன் கெரகம், நாய வாங்கின ஆளு ஒரு நாள் அதுக்கு கால்ல அடிபட்டிருக்குன்னு மாட்டு டாக்டரான நம்ம ரோசி அய்யா கிட்ட போக, அப்புறமென்ன வெள்ளய பாளயங்கோட்ட செயிலுல செயிலரோட நாயக் குளிப்பாட்ட கூட்டிட்டு போய்ட்டாக. வெள்ள வருவான் வருவான்னு தெருல நாய் குலைக்குதப்போ எல்லாம் ரோசி ஓடி ஓடி வந்து கிழக்கே போகும் இரயில் பாஞ்சாலி மாரி கொஞ்ச நாள் பாத்தா. பிறகு அவுக அப்பா ஆசப்படி மதுரயில மாட்டு டாக்டரா இருக்குத ஒரு பயலக் கட்டிக்கிட்டா.
8 comments:
அடப்பாவி.....
இன்னும் எத்தனை கதை வச்சிருக்க அப்பு நீ ??
வாருமய்யா ரவி,
இன்னும் நெரறய கத வச்சிருக்கேன், ஆனா இது ஆறு பதிவுங்கதால ஆறோட நிறுத்திட்டேன்.
எலே மக்கா,
வெள்ள(தங்க)பாண்டி கூட நாய திருட நானும் நீயும் போனத நீ சொல்லவே இல்ல....!!!
அட நெல்லை ஜில்லாவுல வூட்டுக்கு ஒரு காதல் கதை தேரும்போல இருக்கு. நல்லா எழுதியிருக்கீங்க ஆனா ஒரு காதல் கூடவா வெற்றியடையல? (அய்யோ பாவம் நெல்லைகாரங்க)
அய்யா அனானி,
நான் நல்லா இருக்கது உமக்கு புடிக்கலயா?
அனுசுயா,
நன்றி...! நீங்க சொல்லுத மாரி எல்லா வீட்லயுமெல்லாம் ஒரு காதல் கத தேறாது. ஏன்னா அங்க பயக்களும் பிள்ளேளும் பேசினாலே தப்புன்னு சொல்லுவாக இதுல எங்க காதல் கத்திரிக்கா எல்லாம்... இது எல்லாமே கோமாளிக் காதல் அதனால தான் பாதிலேயே புடுங்கிட்டுப் போய்ட்டுது. மத்தபடி பட்டணத்துக் காதல் மாரி கெடயாது எங்க ஊரு காதல். உண்மயான, ஆழமான, வாழ்வின் எல்லை வர வருத காதலாக்கும்.....!!!
சந்திர S சேகரன்,
நன்றி வே உம்ம வருகைக்கும், மறுமொழிக்கும். இது எல்லாமே நான் பாத்த, என்ன சுத்தி நடந்த கூத்து.
பேரு வக்கறது தான் நம்ம முழு நேரத் தொழிலு. கொஞ்சம் கோயான் மாரி இருந்தா அவனுக்கு ஒரு பேரு வச்சிருவோம்.
அய்யா வெற்றிக் காதல் கதய எழுதச் சொல்லுதிய... கண்டிப்பா எழுதுதேன். ஆனா என்னோட கதய எழுதச் சொல்லி ஏன் குடும்பத்துல குழப்பத்த உண்டு பண்ணுதிய?
ஐயா கிறுக்கைய்யா ! ! ! நீரு உண்மையான பேர வச்சு கதெ வுடுதீரா...இல்ல சும்மாங்காட்டியும் ஏதோ ஒரு பேர வச்சு கதெ வுடுதீரா...சம்பந்தப்ட்டவுக பார்த்தா என்ன ஆகும் ?
Post a Comment