Tuesday, May 23, 2006

முல்லா குல்லா... பாகம் 2

முல்லா இருந்த ஊருல ரெண்டு பள்ளியூடம் தான் உண்டு. ஒன்னு கவருமெண்டு பள்ளியூடம், இன்னொன்னு தனியார் பள்ளியூடம். தமிழ்நாட்டுல பாவாடை, தாவணி யூனிபாரம் போட்ட பிள்ளேள் உள்ள பள்ளியூடங்கள்ள தாழையூத்து கவருமெண்டு பள்ளியூடமும் ஒன்னு. இக்கரைக்கு அக்கரை பச்சைங்கிற மாதிரி தாவணி போட்ட பிள்ளேள பாக்க தனியார் பள்ளியூட பயலுவ அலயுவானுவ, சுடிதாரு போட்ட தனியார் பள்ளியூட பிள்ளேள பாக்க கவருமெண்டு பள்ளியூட பயலுவ அலயுவானுவ. நம்ம முல்லா ஏழாப்பு வரை தனியார் பள்ளியூடத்துல சுடிதார பாத்து போட்டு, எட்டாப்புக்கு தாவணி பாக்க கவருமெண்டு பள்ளியூடத்துக்கு வந்து சேந்தான். கவருமெண்டு பள்ளியூடம் வந்தாலும் பய தனியார் பள்ளியூடத்த மறக்காம, அங்க உள்ள ஒரு பிள்ளைய லவ்விட்டு இருந்தான்.

தனியார் பள்ளியூடத்துல எலுகேஜில இருந்தே பேண்ட்டு தான் பயக்கலுக்கு யூனிபாரம். கவருமெண்டு பள்ளியூடத்தில பத்தாங் கிளாஸ் வரை டவுசர் தான். முல்லாக்கு டவுசர் போட புடிக்கலன்னாலும் வேற வழியில்லாம போட்டுட்டு வருவான். பள்ளியூடத்துக்கு வெளில தன்ன பெரிய பயன்னு காட்ட டவுசருக்கு மேல பேண்ட்டு போட்டுட்டு வருவான் முல்லா. பள்ளியூடத்து வாசல்ல பேண்ட்ட களஞ்சு மடிச்சு பைல வச்சு கொண்டு போவான். திரும்ப சாய்ங்காலம் வீட்டுக்கு போம்போது பேண்ட்ட மாட்டிட்டு தான் கெளம்புவான். ஆனா அதுக்கும் வேட்டு வச்சா "ஆவி"ங்கிற வாத்திச்சி.

ஆவி டீச்சர் அந்த கவருமெண்டு பள்ளியூடத்தில இங்கிலீசு பாடம் நடத்துவா. வயசு அம்பத்தி நாலு. ஆவி டீச்சரோட உண்மையான பேரு ஆங்காரி விசாலம். அத சுருக்கி எல்லாரும் ஆவி, ஆவின்னு கூப்பிடுவாவ. ஆவிக்கு இன்னும் கல்யாணம் ஆவல. இருபது வருசத்துக்கு முன்னாடி கூட வேல பாத்த வாத்தியார் ஆரிய நாராயணனோட காதல் வந்து கல்யாணம் பண்ணிக்கிடலாம்னு நினைக்கும் போது, வாத்தியாரோட பொண்டாட்டி "பெரிய குந்தானி" வந்து பள்ளியூடத்தில சாமியாடிட்டா. வாய்க்கு வந்த கெட்ட வார்த்தெயெல்லாம் சொல்லி ஆவிய "இனிமேல் இந்த கெழட்டு பயலோட சுத்தினேன்னா, உன் கொண்டயில தீ வச்சு போடுவென்"னு சொல்லிட்டு போய்ட்டா. அதுல இருந்து ஆவி டீச்சருக்கு ஆம்பிளேள் மேல ஒரு வெறுப்பு. கல்யாணமே பண்ணிக்கிடாம இன்னிய வரைக்கும் காலத்த ஓட்டிட்டா.

நம்ம முல்லா ஒரு நா இந்த ஆவி டீச்சர் வரும் போது பாத்து பேண்ட்ட களத்திட்டான். அவ்வளவு தான் ஆவி கத்தி கூப்பாடு போட்டு இந்தப் பய என்கிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணினான்னு எல்லார்ட்டயும் சொல்ல ஆரம்பிச்சுட்டா. உடனே எட்மாஸ்டர் பிரெம்ப எடுத்து முல்லாட்ட "செவத்த பாத்து திரும்பி நில்லுல"னு சொல்லி புளிச், புளிச்னு பிட்டில நாலு வச்சாரு. அது பத்தாதுன்னுட்டு பியூன் முனியன விட்டு காப்படி வெளக்கெண்ணெய அவன் எண்ணெயில்லாத தலயில தேய்க்கச் சொன்னாரு.

அன்னைலருந்து முல்லா எதக் கழட்டினாலும், ரொம்ப யோசிச்சு தான் களட்டுதான்.

முல்லா அடுத்த வாரம் வருவான்......

10 comments:

Anonymous said...

Hi,
sankar plz send this link to suri.

regards,
Augustin

Anonymous said...

ஏ நம்மூர் பாசைல போட்டு பட்டயக் கிளப்புதீரேவே....
கலக்கும்வே...ப்ளாக்குல நம்மூர்கார பயலுவ கூட்டம் சேர்ந்துப் போச்சுவே...செட்டு சேர்ந்தோம்னா மதுர,தஞ்சாவூர்,மெட்ராஸ் காரனுவ துண்டக் கானும் துணியக் காணும்னு ஓடிருவானுக போல இருக்கே...நடத்தும்யா

நெல்லைக் கிறுக்கன் said...

எல அகஸ்டின், சூரிக்கு ஏற்கனவே லிங்க் அனுப்பிட்டன் டே...

நெல்லைக் கிறுக்கன் said...

டுபுக்கு அண்ணாச்சி - நம்ம பக்கம் வந்து கருத்த சொன்னதுக்கு நன்றி. என்ன தான் மதுர, தஞ்சாவூர், மெட்ராஸ்னு இருந்தாலும் தமிழ் பெறந்தது நம்ம ஊருல்லா...

ilavanji said...

சிரிப்பு தாங்கலைங்....

நடத்துங்க! :))

நெல்லைக் கிறுக்கன் said...

இளவஞ்சி,
நம்ம பதிவ வந்து பாத்துட்டு போனதுக்கு நன்றிவே. அடிக்கடி இந்தப் பக்கம் வாரும்...

Anonymous said...

Greets to the webmaster of this wonderful site. Keep working. Thank you.
»

நெல்லைக் கிறுக்கன் said...

//Greets to the webmaster of this wonderful site. Keep working. Thank you.//

நன்றி முகம் தெரியாத நண்பரே. தொடர்ந்து நம்ம வலைப்பதிவ படிங்க...

Anonymous said...

Nice idea with this site its better than most of the rubbish I come across.
»

Anonymous said...

Great site loved it alot, will come back and visit again.
»