Monday, May 29, 2006

ரொட்டி, சால்னா...

நம்ம ஊர்க்காரப் பயக்கலுக்கெல்லாம் நான் எதச் சொல்லுதேன்னு தெரிஞ்சிருக்கும். தெரியாத வெளியூர் ஆளுகளுக்கு பரோட்டான்னா தெரிஞ்சுடும். நல்ல ரொட்டி தின்னு எவ்ளோ நாளாச்சு. ரொட்டி தின்னே வளந்த உடம்புவே இதெல்லாம்...

புரோட்டா, ரொட்டின்னு நம்ம ஊருப்பக்கம் சொல்லுவாவ.. இந்த ரொட்டி கன்யாகுமரில இருந்து மதுர வரைக்கும் தான்யா டேஸ்ட்டு, மதுரய தாண்டிட்டா வேஸ்ட்டு. கேரளாக்காரனுவ, சிலோன்காரப் பயலுவ எல்லாம் போடுதது பரோட்டா... தண்டி, தண்டியா அவனுக போடுத எருக்கட்டி பரோட்டா தான் மதுரக்கு வடக்க உள்ளவங்களுக்கு தெரியும். நம்ம ஊரு ரொட்டி சின்னதா, மொருமொருப்பா, மெதுவா வாயில போட்டா கரஞ்சு போயிரும்.

அதே மாரி நம்ம ஊரு சால்னா கிட்ட குருமாவாவது எருமாவாவது.. நிக்க முடியாதுல்ல.. மெட்ராசுல அத சேர்வைனு வேற சொல்லிக்கிடுவானுவ. ஒரேத் தண்ணியா இருக்கும். நம்ம ஊரு சால்னால அப்டியே நெய் மெதக்குமய்யா..

அத சாப்டுததுலயும் நம்ம பயக்க ரசனயோட சாப்டுவானுவ. ரொட்டிய சின்ன சின்னத் துண்டா பிச்சு போட்டு அதுக்கு மேல சால்னாவ கோரிக் கோரி ஊத்தி, வெங்காயத்த கூடச் சேத்து அப்டியே வாயில போட்டா.. ஆஹா அதுக்கு ஈடு இணை கிடயாது.

தொட்டுகிடதுக்கு சைவ ஆளுகன்னா ஆம்ப்லேட், ஆப்பாயில், அசைவ ஆளுகன்னா வருவல், கோழிக் கறின்னு எத்தன தடவ தின்னாலும் ரொட்டி சால்னா அலுக்கவே செய்யாது. அதுவும் மட்டன் வருவல் நம்ம ஊருல மட்டும் தான் கெடக்குமுன்னு கேள்விப் பட்டிருக்கேன்.

திருநெவேலில நெறய கடைகள்ல சைவச் சால்னான்னு தனியா வச்சிருப்பானுவ. அதனால முட்ட கூட தொடாத ஆளுக கூட, ரொட்டி சால்னாவ விரும்பிச் சாப்பிடுவாவ. வீட்டுக்கு விருந்தாள் வந்தா கேக்கவே வேண்டாம். ரொட்டி வாங்கிக் கொடுத்து உபசாரம் பண்ணாம திருப்பி அணுப்ப மாட்டாவ...

ரொட்டி சாப்புட பெரிய ஓட்டலுக்கு போவக் கூடாது. அவனுக பரோட்டான்னு எருக்கட்டியப் பெருசா போடுவானுவ.. சால்னாவும் மண்ணு மாரி இருக்கும். ரொட்டிக்கின்னே தனியா உள்ள புரோட்டா(பரோட்டா இல்ல) ஸ்டால்ல போய் சாப்புடனும். புரோட்டா மாஸ்டர் அடிச்சு, வீசி ரொட்டி போடுதத பாத்துகிட்டே இருக்கலாம். ரொட்டி, ஆம்ப்லேட் கல்லுல வேகுதப்ப வார வாசம், கொத்து புரோட்டா போடுதப்ப கல்லுல இருந்து வார சத்தம் இதெல்லாமே கடைக்குள்ள தன்னால இழுத்துட்டுப் போயிரும்.

திருநெவேலில டவுன்ல வைர மாளிக, சங்சன்ல பிரபு ஓட்டல், பாளயங்கோட்டயில செட்டிநாடு, ருசி, குற்றாலத்துல செங்கோட்ட பார்டர்ல உள்ள கடைக, பணகுடி டயானா, பொன்னாக்குடி டிரைவ் இன் புரோட்டா கடை இங்கெல்லாம் ஒரு தடவ சாப்டுப் பாருங்க அப்புறம் சொல்லுவிய...

பொரிச்ச புரோட்டா, வீச்சு புரோட்டா, கொத்து புரோட்டானு எத்தன விதமா சாப்ட்டாலும் அலுக்கவே செய்யாது. ரொட்டி நம்ம தமிழனோட பாரம்பரிய உணவு கெடயாது, ஆனா எப்பிடி நம்ம ஊருக்குள்ள வந்தது, எப்பிடி இவ்ளவு பிரபலமாச்சுங்கது தான் ஆச்சரியமா இருக்கு.....

40 comments:

Kumari said...

Came here via Dubukku's blog

Neenga sonadhu noothukku nooru unmai. Chinna vayasula eppa orrukku ponalum, Mama rotti, salna, varuval vangittu varuvanga. Adhai Aachikku theriyama thattadikku edhuthuttu poi, nila velichathula saapidira sogam aladhi thaan. Roti salnakku munnadi, saivamavadhu, onnavadhu :)
Sigh...inime eppo oorukku poi, eppo idhellam kidaikkumo :(

நெல்லைக் கிறுக்கன் said...

நன்றி kumari,
நீங்க சொன்ன மாரியே, சித்தப்பா, பெரியப்பா, அத்த பயக்களோட தட்டட்டில வச்சு ரொட்டி சால்னா சாப்டிருக்கேன். நாங்களும் ஆச்சிக்கு தெரியாமத் தான் சாப்புடுவோம். அது ஒரு பொற்காலம்....

இலவசக்கொத்தனார் said...

ஆஹா. ஞாபகப்படுத்தி விட்டுட்டீங்களே. எங்க ஊரில் (கல்லிடை) மீரானியா என்ற புரொட்டா கடை உண்டு. அதில் எங்களை மாதிரி வீட்டுக்குத் தெரியாமல் சாப்பிடும் ஆட்களுக்காக தடுப்பு வேற போட்டு வைத்திருப்பார்கள்.

அடுத்தது எப்ப வாய்க்குமோ தெரியலை.

துபாய் ராஜா said...

//"ரொட்டிய சின்ன சின்னத் துண்டா பிச்சு போட்டு அதுக்கு மேல சால்னாவ கோரிக் கோரி ஊத்தி, வெங்காயத்த கூடச் சேத்து அப்டியே வாயில போட்டா.. ஆஹா அதுக்கு ஈடு இணை கிடயாது."//

நெல்லைகிறுக்கன்!!ஒரு காலத்த்தில் தினம்தினம் அலுக்காமல் சாப்பிட்டதை
நினைவுபடுத்திவிட்டீர்கள்.

(துபாய்)ராஜா.

நெல்லைக் கிறுக்கன் said...

நன்றி இலவசக்கொத்தனார்,
ஏ எங்க ஊருலயும் இப்பிடி சைவ ஆளுகளுக்கு தனியா இடம் ஒதுக்கிருப்பாவ... கடைக்குள்ள நுழையும்போதே சுத்தும் முத்தும் பாத்துட்டு தான் உள்ள போகுதது. நானும் உம்ம மாதிரி தான் புரோட்டா சாப்புட காத்துகிட்டு இருக்கேன் வே...

நெல்லைக் கிறுக்கன் said...

ராஜா,
வருகைக்கு நன்றி. நீரு சொல்லுத மாதிரி ரொட்டி எவ்ளவு தான் சாப்டாலும் அலுக்காது வே...

Anonymous said...

அய்யோ நியாபகப்படுத்திடீரேவே...நானும் ஊட்டுக்குத் தெரியாம ரொட்டி திங்கிற பார்ட்டி தான். ஆனா சைவ ரொட்டி தான் சாப்பிடுவேன். (ஆம்லெட் ஓகே).

வீ.கே.புரம் சர்தார் அப்புறம் செங்கோட்டை பார்டர் புரோட்ட்டா ஸ்டால் கேள்விப் பட்டிருப்பீரே...இதெல்லாம் ரொட்டி சால்னாக்கு பேமஸ்...பஸ்ஸுக்கு குடுக்கற காசுக்கு கூட ரெண்டு ரொட்டி திங்கலாம்னு வெற்றிவேல் வீரவேல்ன்னு வீ.கேபுரத்துக்கு பாத யாத்திரை போய் ரொட்டி தின்ன காலத்த சும்மா கிடக்காம நியாபகப்படுத்திடீரேவே...லண்டன்ல ரொட்டிக்கு எங்கவே போவேன்....

நெல்லைக் கிறுக்கன் said...

டுபுக்கு அண்ணாச்சி,
செங்கோட்டை பார்டர்ல உள்ள கடைகள்ல நீரும் சாப்டிருக்கீரா? குத்தாலத்துல குளிச்சிட்டு அப்டியே அந்த ஈரத்துணியோட செங்கோட்டை பார்டருக்கு போயி ரொட்டி, ஆம்லெட் சாப்டுதது ஒரு தனி அணுபவமய்யா...

Anonymous said...

We are visiting Kutrallam this week end :lol:

Prasanna said...

அடடடடா, அதெல்லாம் என்ன ருசி. வீட்ல என்னத்தான் சமைச்சி போட்டாலும் கடை மாதிரி வராதுப்பா. அதுலயும் செட்டிநாடு ஏ-ஒன். 3 கிரேப் ஊத்துவான் பாருங்க, அதுல ஒண்ணு குறைஞ்சாலும் வெட்டு குத்து ஆகிப் போகும். ஒரு மேட்டர் சொல்லவா, வண்ணார்பேட்டை பயலுவ பூரம் செட்டிநாடு தான் போவாங்க. அதுல ஒரு ரகசியம் இருக்கு. இன்னொரு விஷயம் என்னன்னா, ரொட்டி மதியம் நைட் ரெண்டு வேளையும் சாப்பிடலாம். நாம எப்பவும் வருவல் தான்.
அதிலயும் புதன் வியாழன் ஆயிட்டுன்னா வீட்ல நைட் எனக்கு சாப்பாடு எடுத்து வைக்க மாட்டாங்க, கண்டிப்பா கடைல தான். எத்தன பேருக்கு தெரியும்னு தெரியல, தெற்கு பஜார் ஜெயந்தி அது தான் நம்ம ஃபேவரிட். அங்கதான் ரொட்டி 1.50. மத்த இடத்துல எல்லாம் ரெண்டு. நாம் சலிக்காம 20, 25 சாப்பிடுற ஆள்கள், அதனால நமக்கு ஜெயந்தி தான் சரிப்படும்.
கொஞ்சம் ஹை ரேஞ்ச் ல இருந்தா, அப்படியே திருவனந்தபுரம் ரோட்ல இருக்குற எழில் புரோட்டா ஸ்டால் போறது. அட கைல இன்னும் கொஞ்சம் காசு இருக்கா.. அடிங்கடா இன்னைக்கு கிருஷ்ணா கேண்டீன் பக்கத்துல இருக்க ருசி ஹோட்டல். இன்னும் நல்ல காசா, அப்ப பிரபு ஹோட்டல். இப்படி போகும். நாங்க நல்ல ருசிக்கு அடிமைங்க. பொன்னாக்குடிக்கு போய் சாப்ட்டு தெம்பா நடந்தே பெருமாள்புரம் வந்து சேருவோம்
மட்டன் சாப்பிடணும்னா கவலையே படாம பஸ் பிடிச்சு, மேலப்பாளையம் போய் சாப்பிடுவோம். நல்ல ஹோட்டல் எங்க இருந்தாலும் எங்க கண்ல இருந்து தப்பிக்காது. நாங்க பர்ஸ் பாத்து திங்குற ஆள் கிடையாது. எங்க மேலப்பாளையம் பாய் மாமா வைக்குற மாதிரி பிரியாணி வைக்கவே முடியாது அப்படின்னு நான் எங்க வேணும்னாலும் சொல்லுவேன். அய்யா, இப்படி நாக்குல எச்சி வர பின்னூட்டம் விட வெச்சுட்டீங்களே..
பிரசன்னா

நெல்லைக் கிறுக்கன் said...

anonymous,
குத்தாலத்துக்கு போரீயளா? இப்ப ரொம்ப நல்லா எல்லா அருவிலயும் தண்ணி கொட்டுதுன்னு கேள்விப்ப்ட்டேன். நீங்க குடுத்து வச்ச ஆளு வே....

நெல்லைக் கிறுக்கன் said...

வே பிரசன்னா,
தெக்கு பஜார் ஜெயந்தி, எழில், ருசி, பொன்னாக்குடின்னு எல்லாத்தயும் நியாபகப்படுத்தி விட்டுட்டீரே. ஊருக்கு வந்தா ஒரு வாரம் காணாது, எல்லா கடைலயும் சாப்புடததுக்கு. உமக்கு என்ன வே நீரு உள்ளூருலயே இருந்துகிட்டு நல்லா அனுபவிக்கீரு. நாங்கெல்லாம் தான் எப்போ வருவமோ... அது என்ன வே ரகசியம் வண்ணார்பேட்ட பயக்க செட்டிநாடு வருததுல?

சிவா said...

நேத்து தான்வே வீட்டுக்காரிக்கிட்ட ஊருக்கு போனவுடனே தெனமும் நம்ம ஊரு கூர ஓட்டல்ல போய் பரோட்டா சாப்பிடணும்னு சொல்லிக்கிட்டு இருந்தேன். இப்படி வெளாவாரியா எழுதி நாக்குல ருசிய கொண்டு வந்துட்டியலே..ம்ம்ம்...

நெல்லைக் கிறுக்கன் said...

நீரும் நம்மள மாரி ரொட்டி ரசிகர் தானா? நம்ம ஊரு பக்கத்துல ரொட்டி பிடிக்காதுன்னு சொல்லுதவுங்க யாரும் கெடயாது. சீக்கிரம் நானும் ஒரு புரோட்டா கடை ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்...

Anonymous said...

Greets to the webmaster of this wonderful site. Keep working. Thank you.
»

Anonymous said...

Greets to the webmaster of this wonderful site. Keep working. Thank you.
»

Anonymous said...

வணக்கம் நான் இங்கே புதியவன்.. (கண்ணன்)

நெல்லையில் இருந்து செங்கோட்டைக்கு எத்தனை கி.மீ. என்றும், மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு எத்தனை கி.மீ. என்றும் யாராவது விளக்கம் தற முடிமா?

நெல்லைக் கிறுக்கன் said...

கண்ணன்,
நெல்லையில் இருந்து செங்கோட்டை ஒரு 60 கிமீ இருக்கும். மதுரையில இருந்து தோராயமா ஒரு 150 -170 கிமீ இருக்கும்.

நீங்க எந்த ஊர்க்காரர்?

Anonymous said...

நான் செட்டிநாடு

Anonymous said...

ரொட்டி சால்னா ருசிய ஞாபகப் படுத்திட்டீங்களே....செங்கோட்டை பார்டர் புரோட்டா கடை, அப்புறம் எங்க ஊருல (தென்காசி), கிஸர் கடைனு ஒன்னு உண்டு, அங்கெல்லாம் சாப்பிட குடுத்து வச்சிருக்கணும். நான் ஊருக்கு போனா தினமும் night சாப்பாடு ரொட்டி சால்னாதான்.

Anonymous said...

பார்டர்ல நைட் ஷோ பார்த்துட்டு ரொட்டியை பிச்சுபோட்டு சல்னாவுல மிதக்குவுட்டு வெங்காயம் ஜாஸ்தியா ஆம்லேட்டு .. ஹூம்ம்ம் அது ஒரு காலம் பாஸ் ..

டவுண்ல இன்னும் வைர மாளிகை இருக்கானு தெரியல ஆனாலும் இளங்கோ, ஏ- ஒன், ருசின்னு டவுண சுத்தி இன்னும் புரோட்டா சாம்ராஜ்யம்தான்.

(கில்லியிலும் இந்தப்பதிவை இணைத்திருக்கிறேன்)

Anonymous said...

//செங்கோட்ட பார்டர்ல உள்ள கடைக//

நானும் சாப்டிருக்கேன் ரொம்ப சூப்பரா இருக்கும்.

என்ன சார் இப்படி பதிவப்போட்டு ஊரை நியாபகப்படுத்திட்டேஙளே!

இந்த மெட்றாஸ் ல நான் அந்த மதிரி கடைகலுக்கு எஙக போவேன்.?

கானா பிரபா said...

தல

காதல் கதய நடுவழியில விட்டுட்டு. ரொட்டி சால்னாவா? அடுத்தமுறை வரும் போது
ஒரு பிடி பிடிக்கணும் ;-) வாசிக்கவே நாக்கு சப்புக்கொட்டுது.

நெல்லைக் கிறுக்கன் said...

வருகைக்கு நன்றி ரமேஷ். நானும் ஊருக்கு போனா ரொட்டியத் தவிர வேற ஒன்னும் சாப்புடதது கெடயாது.

நெல்லைக் கிறுக்கன் said...

நன்றி விக்கி,
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும். ரெண்டு வருசத்துக்கு முன்னால வைர மாளிகயில சாப்ட்டிருக்கேன். இப்போ இருக்குமான்னு தெரியல.

கூடுதல் நன்றி கில்லியில் இந்தப் பதிவ இணைச்சதுக்கு...

நெல்லைக் கிறுக்கன் said...

அனானி நண்பா,
செங்கோட்ட பார்டருல உள்ள புரோட்டா கடைகளுக்கு ஈடு கெடயாது. கொஞ்ச நாளைக்கு முன்னால விகடன்ல செங்கோட்டை பார்டர் கடையப் பத்தி ஒரு செய்தி வந்திருந்தது.

நெல்லைக் கிறுக்கன் said...

பிரபா,
காதல் கதய இன்னும் தொடர்ந்துட்டு தான் இருக்கேன். இந்த ரொட்டி பதிவு ஒரு பழய பதிவு. ஊருக்கு வந்தா கண்டிப்பா உங்கள ரொட்டி சாப்புடததுக்கு கூட்டிட்டு போறேன்...

Ponchandar said...

"ரொட்டி சால்னா" - க்கு தனி பதிவே போட்டு அசத்தி புட்டீக.....நான் தற்சமயம் செங்கோட்டை பார்டரில்தான் பணி புரிகிறேன் ஒரு மரம் ஏற்றுமதி & இறக்குமதி கம்பெனியில்...நீங்கள் குறிப்பிட்ட ரொட்டி கடை பேரு "ரஹ்மத்".. குற்றாலத்துக்கு அருகில்தான் எனது வீடு...இப்பொழுது எனது மகன் ரொட்டி -ன்னா கூட ரெண்டு உள்ளே தள்ளுகிறான்...

நெல்லைக் கிறுக்கன் said...

வாங்க golden moon....
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. நீங்க செங்கோட்டயில தான் இருக்கியளா? குத்தாலம் சீசன் எப்படி இந்த வருடம்?

இலவசக்கொத்தனார் said...

ரொம்ப நாள் கழிச்சு மீண்டும் முகப்பில் பாக்கேன். படிக்கும் போதே எச்சி ஊறுதேய்யா. இங்கிட்டு எங்க போவ ரொட்டி திங்க.....

Ponchandar said...

ஆமாம் நண்பரே ! !

செங்கோட்டை பணிபுரியும் இடம்.....குற்றாலத்திற்கு அருகில் உள்ள நன்னகரத்தில் வீடு..இவ்வருடம் சீசன் மிக பிரமாதம்..நான் இதை எழுதிக்கொண்டு இருக்கும் போது கூட சாரல் தூறிக்கொண்டு இருக்கிறது...எல்லா அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது....சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகம்...இவ்வருட சீசனில் சுமார் 20 லட்சம் பயணிகள் வந்து சென்றதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது...
நான் எப்பொழுதும் இரவு 9 மணி or அதிகாலை 5 மணிக்கு அருவிக்கு செல்வேன். எனது பெயர் பொன்சந்தர்...சொந்த ஊர் புங்கம்பட்டி கடையம் அருகில் உள்ளது..தாங்கள் விரும்பினால் ponchandar@gmail.com-க்கு பதில் அனுப்புங்கள்....நன்றி ! ! !

ilavanji said...

அய்யா நெல்லைக்கிறுக்கரே,

வாயெல்லாம் ஜொல்லுவே! என்னத்த செய்ய? போன வருசம் இதே நேரம் டாட்டா சொல்லிட்டுப்போன சிவாவைக்கூட இழுத்துக்கிட்டு வந்துடுச்சுய்யா உம்ம பதிவின் ருசி!

குற்றாலத்துல லைட்ட ரெண்டு "ரவுண்டு"க்கப்பறம் நடுராத்திரி 12 மணிக்கு குளிச்சுட்டு அகோரப்பசில வாங்கிட்டுப்போன ரொட்டிகள சால்னால கரைச்சடிச்ச அனுபவம் பெற்ற புண்ணியவான் அடியேன்!

இந்த பதிவை ஒரு பிரிண்ட் எடுத்து அப்படியே திங்கலாமான்னு பார்க்கறேன்! :)

முல்லாக்கதைய மறந்துடாதீங்க!

நெல்லைக் கிறுக்கன் said...

வாருமய்யா கொத்தனாரே,
ஒரு வருசம் கழிச்சு நம்ம பக்கம் வந்திருக்கிய... எனக்கும் எச்சி ஊறுதய்யா.. அடுத்தால தீவாளிக்கு தான் ஊரு பக்கம் போய் ரொட்டி திங்க முடியும். நீரு இப்போ எங்க இருக்கீரு?

நெல்லைக் கிறுக்கன் said...

பொன்சந்தர்,
நன்னகரத்தில வீடா...!!! சொர்க்கத்தில இருந்த மாதிரில்லா இருக்கும். வருசம் பூரா சாரலும், காத்தும்... கொடுத்து வச்ச ஆளு நீங்க...

நானும் உம்ம மாதிரி ராத்திரி தான் அருவிப் பக்கம் போவேன். 12 மணிக்கு அருவில குளிச்சிட்டு அந்த ஈரத்தோட பார்டருக்கு போய் ரொட்டி சாப்புடதது ஒரு தனி சுகம்... ரொம்ப நாளாச்சு அந்தப் பக்கம் வந்து.

கண்டிப்பா உங்க மின்னஞ்சல் முகவரிக்கு தனி மடல் அனுப்புறேன்.

Ponchandar said...

ஐயா ! ! கிறுக்கனய்யா ! !

நான் இந்திய விமானப் படையில் 15 ஆண்டுகள் பணி புரிந்து அதிலிருந்து விலகி (DISCHARGE ஆகி) குற்றாலமும் அதன் சூழலும் மிகவும் பிடித்துப் போய் இங்கேயே தங்கி(SETTLEஆகி)விட்டேன்.

ஆமாம்..ஐயா..இது சொர்க்கம்தான்

Anonymous said...

என்ன தான் இருந்தாலும் விருதுநகர் பர்மா கடை பரோட்டாக்கு ஈடு இணை இல்லைவே!

பார்டர் ரகுமத் பாய் கடை ரொட்டியும் தனி ருசி தான். வாத்து முட்டை ஆம்லேட்டோட சாப்புட்டா........ அட...அட...அட....

சும்மா இல்லாம ஊர் நெனப்ப இப்புடி கெளப்பி விட்டீரே மக்கா...

நெல்லைக் கிறுக்கன் said...

நன்றி இளவஞ்சி,
இந்தப் பதிவு போன வருசம் போட்டது. அப்பத்தான் சிவா இதுக்கு பின்னூட்டம் போட்டாரு...

முல்லாக் கதய கண்டிப்பா தொடருதேன்.

நெல்லைக் கிறுக்கன் said...

வாருமய்யா வெயிலான்,
விருதுநகர் பொறிச்ச புரோட்டா மாதிரி வருமா....

வாத்து முட்ட ஆம்லேட்... கேக்குறப்பவே நாக்கு ஊறுதே...

V Ramesh said...

ஆஹா இப்படி நாவில் ஜலம் ஊற பதிவு போட்டுட்டீங்களே.. இங்கன அந்த மாதிரி புரோட்டா கிடைக்காதே.... ஒரு அரசப்பர் வைச்சிருக்கானுவ.. ம் இன்னிக்கு எப்படியும் ஒரு வேட்டை உண்டு

நெல்லைக் கிறுக்கன் said...

நன்றி ரமேஷ். ரொட்டி சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு. இந்தப் பதிவு போட்டு கிட்டதட்ட மூனு வருசம் ஆகப்போகுது. இன்னும் ரொட்டிப் பிரியர்களின் பின்னூட்டம் தொடருதத நெனச்சா சந்தோசமா இருக்கு...