Thursday, May 25, 2006

டயட்டிங்

ஆபிசுல மத்யானம் நிறைய பேரு கூட்டமா கெளம்பி பக்கத்துல இருக்குற பழக்கட முன்னாடி வரிசையா நிக்குதுக. என்னான்னு போயி பாத்தா "fruit bowl" அப்டின்னுட்டு ஒரு சின்ன சட்டி நெறய எல்லா பழத்தயும் போட்டுக் குடுக்கான். அத எல்லா பயவிள்ளேளும் டயட்டிங்னு சொல்லி வாங்கித் திங்குதுக. காலேலயும், ராத்திரியும் நல்லா மூக்கு புடிக்க தின்னு போட்டு, மத்யானம் மட்டும் என்னத்துக்கு இந்த டயட்டிங்கோ தெரில.

நம்ம ஆளு ஒருத்தருக்கு விபரீத ஆசை வந்து 2 மணிக்கு அந்த "fruit bowl" வாங்கி தின்னுட்டு, மூனு மணிக்கு பசி தாங்க முடியாம, பச்சியக் கொண்டா, போண்டாவக் கொண்டானு தட்டழிஞ்சுட்டு வந்தாரு. கேண்ட்டீன்ல உள்ள ஐட்டத்துல பேர்பாதி உள்ள போனதும் தான் அடங்குனாரு.

இது இப்படின்னா, மத்யானம் சாப்பாடு கொண்டு வார கூட்டம் அதுக்கு மேல. அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்ட்ல ஒரு மாமி இருக்கு, அது ஒரு பெரிய சாக்குப் பைய தூக்கி கிட்டு மல்லேஸ்வரி கணக்கா வரும். அந்தம்மா தூரத்தில வரும்போதே நம்மூரு குசும்பனுக, ஏல சோத்து மூட்ட வருது பாருலன்னு கத்துவானுக. தட்ட, சீட, எள்ளுருண்ட, கடல முட்டாய் இதெல்லாம் அப்பப்போ கொரிக்கதுக்கு, ரெண்டு குழம்பு, ஒரு கூட்டு, ஒரு பொரியல், தயிர், மோர்னு எல்லா ஐட்டமும் தனித் தனிச் சட்டில இருக்கும். யாரயும் துணைக்குக் கூப்பிடாம, தானே தனியாளா கடபரத்தி எல்லாத்தயும் ஒரு வெட்டு வெட்டும்.

காலேல ஆபிசுக்கு வாரதே 11 மணிக்குத் தான். பிறகு தட்ட, சீட எல்லாத்தயும் ஒவ்வொன்னா அரைக்கதுக்குள்ள மத்யானம் வந்துரும். அப்புறம் சோத்த தின்னு போட்டு திரும்ப 2.30 மணில இருந்து மோர குடிக்கேன், சாரக் குடிக்கேன்னு 5 மணி வர ஓட்டிட்டு, சரியா 5 மணியானதும் ஸ்நாக்ஸ் திங்கப் போரேன்னு கெளம்பிடும். எல்லாம் சரி அந்த மாமி எப்போ தான் வேல பாக்கும்னு கேப்பீகளே... "வயுத்துக்கு உணவு இல்லாத போது சிறிது செவிக்கும் ஈயப்படும்"னு அப்பப்போ மாமி மெயில் பாக்கது, பாட்டு கேக்கதுன்னு ஓட்டிடும்.

சாய்ங்காலம் 5 மணிக்கு ஸ்நாக்ஸ் தின்னுட்டு, 5.30 மணிக்கு, அவுக வீட்டு மாமா வந்ததும்(அவருகிட்டயும் ஒரு சோத்து மூட்ட இருக்கும்), "இன்றைய பொழுது இனிதே கழிந்ததுன்னு" கெளம்பிப் போயிடும்.

5 comments:

Anonymous said...

Your blogs are too good. Keep writing...

G.Ragavan said...

அடடே! ரொம்ப நொந்துருக்கீங்கன்னு தெரியுது...இந்த டயட்டிங் எல்லாம் நமக்கு ஒதவாது. மூனுவேளைக்கும் முறையாச் சாப்பிடனும்.

இந்தப் பழச்சட்டி சாப்புடுறவங்கள நெனச்சா பாவமா இருக்கும். ஒரு பழம் சாப்பிட்டாலும் பலாப்பழமாச் சாப்பிட்டா ஜம்முன்னு இருக்கும்...கேட்டாத்தான......

சென்னைக்கு வந்தப்புறம் நானும் கேரியர்தான்....ஒன்னுல தயிரு, ஒன்னுல சோறு...ஒன்னுல வெஞ்சனம்...அப்புறம் கொஞ்சோலக் கொழம்பு...

நெல்லைக் கிறுக்கன் said...

சரியாச் சொன்னிய மூனுவேளைக்கும் முறையாச் சாப்பிடனும்னு... இங்க எங்க ஆபிசுல கொஞ்ச பேரு முறையாச் சாப்பிட்டா பரவால்ல நெறய சாப்டுட்டு, மேளம், வேப்பிலை எதுவும் இல்லாம 2-3 உக்காந்த மேனிக்கே சாமியாடி, ஆடி ஏத்தாப்புல இருக்க டி.வி பொட்டி மேல நங்கு நங்குனு முட்டிட்டு கெடக்கானுவ..

வெஞ்சனம், கொழம்புன்னு நம்ம ஊரு தமிழக் கேக்கதுக்கு என்னா சுகமா இருக்கு.

Anonymous said...

What a great site, how do you build such a cool site, its excellent.
»

Anonymous said...

Hmm I love the idea behind this website, very unique.
»