Monday, May 22, 2006

நெல்லைக் கிறுக்கன்

நான் இன்னைலருந்து தமிழ்ல எழுதப் போறேன். போன வெள்ளிக் கெழம பெங்களூர்ல இருந்து சென்னைக்கு ஒரு volvo பஸ்ல வந்தேன். மொத்தம் அந்த ப்ஸ்ல என்னயும் சேத்து 4 பேரு தான்.

அந்த பஸ்ல வந்த ஒரு வயசான மாமி ஹைவே மோட்டல்ல பிஸ்கட்டு வில கேட்டு அதிர்ச்சியாகி, கடக்காரன போலீஸ்ல கம்பெளய்ண்டு கொடுத்துடுவேன்னு சொல்ல, அதுக்கு அந்த எமப் பய, போலீஸ் இல்ல மிலிட்டரில வேனாலும் போய் சொல்லு ஆயான்னு நக்கலா சொன்னான். பாவம் மாமி ரொம்ப நாள் கழிச்சு வீட்ட விட்டு வெளிய வருதுன்னு நினைக்கேன், அதான் வெவரம் தெரியாம பேசுது.

பஸ்ல வந்தும் மாமி விடல டிவில படம் போடச் சொல்லி ஒரே ரகள. டிரைவர் ஒரு ஹிந்தி படம் போட்டாரு. DDல 15 வருசத்துக்கு முன்னாடி ஹிந்தி படம் பாத்தது, அதுக்கப்புறம் இப்ப தான் பாக்குதேன். வடக்க நிறைய படத்துல ரெண்டு மூனு ஹீரோ ஒன்னா நடிக்கானுவ, ஆனா நம்ம பயலுவ ஒரு படத்துல நடிச்ச உடனே பங்காளி சண்ட போட அரம்பிச்சிடுதானுவ.

ஸ்ரீபெரும்புதூர் வழியா வரும் போது ரெண்டு விசயம் என் கண்ணுல பட்டுது. ஒன்னு நம்ம ராஜீவ் காந்தி இறந்த இடம். அந்த வழியா பஸ் போகுதப்ப மனசு கனமா இருந்த்தது. நாம இன்னைக்கு இந்த அளவு IT, Technologyல வளந்திருக்கோம்னா அதுக்கு அவரு அன்னைக்கு போட்ட அஸ்திவாரம் தான் காரணம். மனுசன் இப்ப இருந்திருந்தா இன்னும் நாம வளந்திருப்போம். நமக்கு குடுத்து வச்சது அவ்வளவு தான். அவரு இறந்த இடம் இப்ப அமைதியா இருக்கு. ராஜீவோட எத்தனை கனவுகள் அந்த மண்ணோட போச்சோ......

ரெண்டாவதா நான் பாத்தது Nokia, Saint Gobain, Hyundaiனு வரிசயா அந்த ரோட்டில உள்ள தொழிற்சாலைகள். புது அரசாங்கம் இன்னும் நிறய தொழிற்சாலைகள சென்னைக்கு கொண்டு வரும்னு நம்புவோம்.

முல்லா, குல்லா கதய படிச்சுட்டு நம்ம பயலுவ நிறய பேரு போன் பண்ணி பேசினானுவ. முல்லாவ பத்தி நானும் நிறய மேட்டரு வச்சிருக்கேன், அதயும் எழுதுன்னு சொன்னானுவ. இதுல இருந்து எல்லாரும் முல்லா மேல ரொம்பபபபபபபபப பாசமா இருக்கானுவன்னு புரிஞ்சிக்கிட்டேன்.

3 comments:

Gnaniyar @ நிலவு நண்பன் said...

அட நம்ம ஊரு பையன்..வாங்க நண்பா வாழ்த்துக்கள்..

நெல்லைக் கிறுக்கன் said...

நன்றி நிலவு நண்பரே... நீரும் நம்ம ஊரு தானா...? நம்ம பயக்க கூட்டம் நெறய கூடிப்போச்சுன்னு டுபுக்கு அண்ணாச்சி சொன்னாரு, அது சரி தான் வே... நீரு நெல்லைல எந்த பக்கம்?

Anonymous said...

Interesting site. Useful information. Bookmarked.
»